Tamil Cinema News
தென்னிந்தியாவில் முதல் சாதனை படைத்த லக்கி பாஸ்கர்… இன்னமும் ட்ரெண்ட்ல இருக்கா?
போன வருடம் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட படங்களாக இருந்தன.
அப்படியான திரைப்படங்களில் லக்கி பாஸ்கர் முக்கியமான படமாகும். லக்கி பாஸ்கர் வெளியான முதல் நாளில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் போக போக படத்திற்கான வரவேற்பு எக்கச்சக்கமாக அதிகரித்தது.
இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்த பிறகு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டது. ஓ.டி.டியில் வெளியிட்ட netflix நிறுவனம் பலமொழிகளில் இந்த திரைப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டது.
ஓ.டி.டியை பொருத்தவரை அதிலும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது லக்கி பாஸ்கர். அப்போது அதிகமாக மக்களால் பார்க்கப்பட்ட படங்கள் லிஸ்டில் லக்கி பாஸ்கரும் ஒரு படமாக இருந்தது.
இந்த நிலையில் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆன பிறகும் கூட லக்கி பாஸ்கர் இன்னமும் நெட்ஃப்ளிக்ஸில் அதிக பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவிலேயே 13 வாரங்கள் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் இருந்த திரைப்படம் என்கிற அந்தஸ்தை லக்கி பாஸ்கர் பெற்றிருக்கிறது.
