சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகிய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படம் லக்கி பாஸ்கர் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படமாகும்.
அமரன் திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் லக்கி பாஸ்கர் திரைப்படமும் வெளியானது. இதனால் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு பெரிதாக திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனால் வெளியான ஒரு சில நாட்களிலேயே படத்திற்கான வரவேற்பு அதிகரித்தது.
பிறகு திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் லக்கி பாஸ்கர் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமரன் படத்துக்கு போட்டி போட்டு பெரிய வெற்றியை கொடுத்தது.
லக்கி பாஸ்கர் வசூல்:

மேலும் தொடர்ந்து அதன் திரையரங்குகளும் அதிகரித்தது லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பொறுத்தவரை வங்கியில் கிளர்க்காக பணிபுரியும் கதாநாயகன் மிகப்பெரும் ஊழலை செய்து தனது வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் பணம் சேர்க்கிறார்.
அதை எப்படி சேர்க்கிறான் என்பதுதான் படத்தின் மொத்த கதையே இந்த கதையில் துல்கர் சல்மான் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். 30 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 115 கோடிக்கு மேல் ஓடி வசுல் சாதனை செய்திருக்கிறது.
இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக அடுத்து தமிழில் துல்கர் சல்மானுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.