வேண்டாம் அந்த சீட்டை போடாத மாப்ள.. லைக்கா எவ்வளவு சொல்லியும் கேட்காத ஷங்கர்.. இந்தியன் 3 இல் எடுத்த முடிவு..!

வேட்டையன் திரைப்படத்திற்கு முன்பு வரை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கு வெளியான திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை.

லால் சலாம் திரைப்படமும் சரி இந்தியன் டு திரைப்படமும் சரி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதே சமயத்தில் எடுக்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் ஓரளவு வரவேற்பை கொடுத்தது.

விடாமுயற்சி திரைப்படமும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.

லைக்காவின் திட்டம்:

director shankar
director shankar
Social Media Bar

எனவே திரையரங்குகளில் வெளியிட்டால் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா? என்பதும் கேள்வியாக இருக்கிறது எனவே லைக்கா நிறுவனம் இந்த படத்தை நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறது என பேச்சுக்கள் இருக்கின்றன.

ஏற்கனவே சேரன் கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் இதற்கு முயற்சி செய்தனர் இப்பொழுது அந்த வகையில் லைக்காவும் டிவி நிறுவனங்களிடம் திரைப்படத்தை நேரடியாக விற்பனை செய்யலாம் என்று நினைத்தது.

ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவ்வளவு பெரிய இயக்குனரின் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவில்லை என்றால் அது அவருக்கு அவமானமாக இருக்கும் என்பதால் ஷங்கர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.