Cinema History
கருணாநிதியும் எம்.ஆர் ராதாவும் சேர்ந்து உருவாக்கிய நாடகம்!.. தடை செய்த அரசு!.. பெரும் சம்பவம் போல!..
MR Radha Kalainger M karunanithi : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒரு நடிகர் எம்.ஆர் ராதா எம்.ஆர் ராதாவை பொருத்தவரை சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பெரும் நடிகர்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே தனி நாடக கம்பெனி அமைத்து அதன் மூலமாக பெரும் வருவாய் ஈட்டி வந்தவர்.
சினிமாவிற்கு வந்து தான் அவர் பெரிய பணக்காரர் ஆனார் என்றெல்லாம் கிடையாது நாடகத்தில் இருக்கும் பொழுதே எம் ஆர் ராதா பெரும் செல்வந்தராகதான் இருந்தார். இதனாலேயே சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் என அனைவருமே எம்.ஆர் ராதாவை அண்ணா என்று தான் அழைப்பார்கள்.
பெரியாரின் கொள்கைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் எம்.ஆர் ராதா அது அவரது நாடகங்களில் எப்போதுமே வெளிப்படையாக தெரியும். இப்படி எம்.ஆர். ராதா உருவாக்கிய ராமாயணம் நாடகம் ஒன்று பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த நிலையில் மு.கருணாநிதியுடன் ஒன்றிணைந்து எம்.ஆர் ராதா ஒரு நாடகத்தை எழுதினார். எம்.ஆர் ராதா எழுதினாலே சர்ச்சைக்கு உள்ளாகும் என்றால் அதிகமாக திராவிட கருத்துக்களையும் மனதில் கொண்டவர் மு.கருணாநிதி என்னும் பொழுது இவர்கள் இருவரும் இணையும் நாடகம் எப்படி இருக்கும்.
அப்படி உருவான நாடகம்தான் தூக்கு மேடை. மாவீரன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் வாழ்க்கையை கூறும் விதமாக இவர்கள் எழுதிய கதைதான் தூக்குமேடை. அதில் புரட்சிகரமாக அவர்கள் எழுதி இருந்த பல வசனங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின. இதனை தொடர்ந்து அரசே அந்த நாடகத்தை தடை செய்தது இருந்தாலும் திரும்பவும் வேறு பெயரில் அதே நாடகத்தை நடத்தினார் எம்.ஆர் ராதா.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்