Connect with us

சம்பளமெல்லாம் பேசுன பிறகுதான் அதை பண்ணுவாங்க… மாமன்னன் நடிகை கொடுத்த பகீர் தகவல்..!

raveena-ravi

News

சம்பளமெல்லாம் பேசுன பிறகுதான் அதை பண்ணுவாங்க… மாமன்னன் நடிகை கொடுத்த பகீர் தகவல்..!

Social Media Bar

பின்னணி ரப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்து தற்சமயம் மக்கள் மத்தியில் அடையாளத்துக்குரிய கதாநாயகியாக மாறி இருப்பவர் ரவீனா. தமிழ் திரைப்படங்களில் இவர் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக பின்னணி குரல் கொடுப்பவர்கள் பெரிதாக மக்கள் மத்தியில் தெரிய மாட்டார்கள். ஆனால் இவருக்கு திரையில் வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் தொடர்ந்து மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

நிமிர்ந்து நில், அனேகன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நிறைய கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார் பிரவீனா. முதன் முதலாக 2017 ஆம் ஆண்டு வெளிவந்த கிடாயின் கருணை மனு என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ரவீனா அறிமுகம்:

அதனை தொடர்ந்து அதில் அவர் நடித்தார். அவரது நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்தார்.

ஆனால் இந்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை. 2022ல் இவர் நடித்த லவ் டுடே திரைப்படம் தான் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. ஏனெனில் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய ரவீனா மாமன்னன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் டப்பிங் துறை குறித்து அவர் சில தகவல்களை வெளியிட்டிருந்தார். டப்பிங் பேசுவதற்காக வாய்ப்புகளை கொடுத்து சம்பளத்தையும் பேசி விடுவார்கள்.

டப்பிங் துறை பிரச்சனைகள்:

ஆனால் கடைசி நேரத்தில் நம்முடைய குரல்தான் அந்த படத்தில் வந்ததா இல்லையா என்று படம் பார்க்கும் போதுதான் நமக்கு தெரியும். அவ்வளவு சிக்கல்கள் நிறைந்த துறை டப்பிங் துறை.

கடைசி நேரத்தில் கூட பேசும் நபரை மாற்றி இருப்பார்கள். அது தெரியாமல் நாம் பேசிவிட்டு காத்திருப்போம். அதுதான் படத்தில் வரும் என்று காத்திருப்போம் இதே மாதிரி ஒரு படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக  என்னிடம் கேட்டிருந்தனர்.

நானும் என்னை அழைப்பார்கள் என்று வெகு நாட்களாக காத்திருந்தேன் அழைப்பு எதுவும் வரவில்லை திரும்ப அவர்களுக்கு போன் செய்து கேட்ட பொழுது அந்த படத்திற்கான டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன என்று கூறினார்கள்.

அதில் கூட எனக்கு வருத்தம் இல்லை ஆனால் போன் செய்து நமக்கு தெரிவித்திருக்கலாம் அல்லவா இப்படித்தான் டப்பிங் ஆர்டிஸ்ட்களின் நிலைமை இருக்கிறது என்று வெளிப்படையாக விஷயங்களை கூறியிருக்கிறார் ரவீனா.

Articles

parle g
madampatty rangaraj
To Top