Connect with us

குக் வித் கோமாளியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக களம் இறங்கும் திரைப்பட ஹீரோ!.. அந்த படத்தில் நடிச்சவரா இவரு..

cook with comali 5

News

குக் வித் கோமாளியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக களம் இறங்கும் திரைப்பட ஹீரோ!.. அந்த படத்தில் நடிச்சவரா இவரு..

Social Media Bar

Cook with Comali: விஜய் டிவி தொடர்களில் மக்கள் மத்தியில் வெகுவாக எதிர்பார்ப்பை பெறும் சில நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது மொத்த தமிழ் பார்வையாளர்களுக்கும் புதுவிதமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.

பொதுவாக சமையல் நிகழ்ச்சி  என்றாலே  சீரியஸான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பாடு சமைப்பது என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருந்தாலும் அதில் காமெடி என்பது சுத்தமாக இருக்காது.

இந்த நிலையில் அதில் கோமாளி என்கிற ஒரு விஷயத்தை வைத்து காமெடியுடன் கலந்த நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உருவானது. முதல் சீசன் வெளியான பொழுது அது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் இரண்டாம் சீசனிலிருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர்.

சிவகார்த்திகேயன் ஆர்.ஜே பாலாஜி மாதிரியான நடிகர்களே கூட தினசரி அந்த நிகழ்ச்சியை பார்க்க துவங்கினர். இந்த நிலையில் எப்படி அந்த நிகழ்ச்சியில் சமைப்பவர்களும் கோமாளிகளும் மிகவும் காமெடி தனமாக இருக்கிறார்களோ அதே போல அதில் தீர்ப்பை வழங்கக்கூடிய செஃப் தாமுவும் வெங்கடேஷ் பட்டும் கூட மிகவும் ஜாலியான நபராகவே இருந்து வந்தனர்.

விலகிய வெங்கடேஷ் பட்:

இந்த நிலையில் இந்த குக் வித் கோமாளி சீசன் 5 விற்கு வெங்கடேஷ் பட் வரவில்லை என்று கூறப்பட்டது. வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு வேறு ஏதோ வேலைகள் இருப்பதாக கூறி இருப்பதால் கூறி இருக்கிறார்.

அதே சமயம் குக் வித் கோமாளியை இயக்கி வந்த இயக்குனரும் தற்சமயம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் செஃப்பாக களம் இறங்குகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தற்சமயம் செஃப்பாக களம் இறங்கி இருக்கிறார்.  இவர் ஒரு சமையல் செய்யக்கூடியவர் என்பது பலரும் அறியாத விஷயம். மெஹந்தி சர்க்கஸ் என்கிற தமிழ் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

பென்குயின் என்கிற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் இது இல்லாமல் இவர் தனியாக ஒரு நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் தற்சமயம் விஜய் டிவியில் குக் வித் கோமாளிகள் சேர்ந்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு இருக்கும் என்பது போக போக தான் தெரியும்.

To Top