Connect with us

காமெடி படம்னு சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டாங்க!.. அந்த ட்ரெஸ் போட்டு நடிக்க விருப்பமே இல்ல!.. அஜித் பட இயக்குனரால் கடுப்பான நடிகை!.

ajith kayal ananthi

Cinema History

காமெடி படம்னு சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டாங்க!.. அந்த ட்ரெஸ் போட்டு நடிக்க விருப்பமே இல்ல!.. அஜித் பட இயக்குனரால் கடுப்பான நடிகை!.

Social Media Bar

Kayal ananthi : சினிமாவில் கதாநாயகி ஆவதற்கு நிறம் ஒரு தடை கிடையாது என்பதை நிரூபித்த ஒரு சில நடிகைகள் வரிசையில் கயல் ஆனந்தியும் முக்கியமானவர். கயல் ஆனந்தி சினிமாவிற்கு வந்தபோது இயல்பான தனது முகத்துடன்தான் வந்தார்.

கயல் திரைப்படத்தில் அவர் நடித்த போது கூட இயக்குனர் பிரபு சாலமன் அவருக்கு எந்தவித ஒரு மேக்கப்பும் செய்யாமல் சாதாரண வேலைக்கார பெண்ணாகத்தான் நடிக்க வைத்திருந்தார். இருந்தாலும் அந்த திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.

kayal-ananthi

இந்த நிலையில் கயல் திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் கருப்பு நிறத்தில் இருப்பதால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார் கயல் ஆனந்தி. இதனை தொடர்ந்து கேரளாவிற்கு சென்ற அவர் அங்கு பல சிகிச்சைகளை மேற்கொண்டு வெள்ளை நிறத்திற்கு மாறி திரும்ப தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தார்.

பொதுவாக தமிழ் சினிமாவிற்கு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் லட்சுமிமேனன் போன்ற நடிகைகள் எல்லாருமே ஆரம்பத்தில் கருப்பு நிறத்தில் சினிமாவிற்கு வந்தாலும் பிறகு சினிமாவில் நிறத்தால் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்கிக் கொள்வதற்காக பிறகு அவர்கள் வெள்ளை நிறத்திற்கு மாறிவிடுகின்றனர்.

நடிகையை ஏமாற்றிய இயக்குனர்:

இந்த நிலையில் திரும்ப சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்த பொழுது திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக என்ட்ரி ஆனார் கயல் ஆனந்தி. இந்த திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்சமயம் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதையை இவர் நடிகை ஆனந்தியிடம் கூறும் பொழுது ஒரு காமெடி திரைப்படத்தின் கதை என்று மட்டுமே கூறி இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்க துவங்கிய பிறகுதான் இது ஒரு பாலியல் காமெடி திரைப்படம் என்பதே தெரிந்தது.

மேலும் கயல் ஆனந்தியை பொருத்தவரை அவர் மிகவும் மாடலான உடைகளை அணிய மாட்டார். பாரம்பரிய உடைகளை அணிந்துதான் அதற்கு முன்பு நடித்து இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மாடர்ன் உடைகளை கொடுத்த பொழுது அதை அணிய விருப்பமில்லை என்றாலும் இயக்குனர் சொன்னதால் வேறு வழி இன்றி அணிந்து  நடித்துள்ளார். கடைசியில் அந்த படம் சர்ச்சைக்குள்ளாகி அது கயல் ஆனந்தியின் சினிமா வாழ்க்கையிலேயே பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top