Cinema History
தமிழ் சினிமாவிலேயே அதிக சண்டைக்காட்சி உள்ள படம் லோகேஷ் படம் கிடையாது!.. எம்.ஜி.ஆர் படம்.. 200 நாள் ஓடுச்சு!..
Actor MGR: சண்டை காட்சிகளுக்கும் சினிமாவிற்கும் இடையே எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை சண்டை காட்சிகள் அதிகம் உள்ள திரைப்படங்கள்தான் அதிகமான வசூலை கொடுத்திருக்கின்றன. கே.ஜி.எஃப் பாகுபலி போன்ற திரைப்படங்கள் இதற்கு முக்கியமான உதாரணமாகும்.
முக்கியமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுப்பதற்கும் அதில் இருக்கும் சண்டை காட்சிகளே காரணமாக இருக்கின்றன. தமிழ் சினிமாவிலேயே அதிக சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படம் எது என்கிற ஒரு விஷயத்தை பிரபல சினிமா பிரபலமான சித்ரா ராமகிருஷ்ணன் தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் சண்டை காட்சிகளுக்கு பெயர் போன ஒரு நடிகர் என்பது அனைவருமே அறிந்த விஷயம். அவரின் சண்டை காட்சிகளுக்காகவே அவரது திரைப்படங்கள் அப்போது பெரும் வெற்றியை கொடுத்தன. இதனால் அதிக சண்டை காட்சிகளை வைத்து ஒரு எம்.ஜி.ஆர் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தனர்.
அப்படி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் மதுரை வீரன் என்கிற திரைப்படம் இந்த திரைப்படத்தில்தான் தமிழ் சினிமாவிலேயே அதிக சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேப்போல தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று வெற்றியை கொடுத்த திரைப்படம் மதுரை வீரன்.
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி இருக்கின்றன. மொத்தமாக ஒரு கோடி ரூபாய் அப்பொழுதே வசூல் செய்திருக்கிறது மதுரை வீரன் ஒப்பிட்டளவில் பார்க்கும் பொழுது இது இப்பொழுது லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் செய்யும் வசூலுக்கு இணையான வசூலாகும்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்