Tamil Cinema News
த்ரிஷாவுக்கும் அஜித்துக்கும் நடந்த நெருக்கமான காட்சி.. திரைக்கதையில் இல்லாததை செய்த த்ரிஷா.!
தற்சமயம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்று வருகிறது விடாமுயற்சி திரைப்படம். பொதுவாக ஆக்ஷன் கதாநாயகர்கள் என்றாலே பெரும்பாலும் சண்டை காட்சிகள்தான் இருக்கும்.
ஆனால் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு பெரிதாக சண்டை காட்சிகள் கூட இல்லாமல் இந்த திரைப்படம் அதிக வரவேற்பு பெற்று இருப்பது சினிமாவில் ஒரு மாற்றமான முயற்சியாக தான் பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் திரிஷாவின் கதாபாத்திரமும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கும் த்ரிஷா அதனால் தனது கணவர் அஜித்தை விவாகரத்து செய்வதற்கும் முடிவு செய்வதாக தான் கதையே அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கின்றேன் என்று தெரிந்த பிறகும் கடத்தப்பட்ட என்னை எதற்காக காப்பாற்றினாய் என்று திரிஷா கேட்பதாக ஒரு காட்சி வரும்.
அப்பொழுது அஜித் ஏனென்றால் இப்பொழுதும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறுவார். உடனே த்ரிஷா அஜித்தை கட்டிப்பிடித்துக்கொண்டு சாரி கேட்டுவிட்டு கண்ணீர் விட்டு அழுவதாக காட்சிகள் இருந்தது.
இது குறித்த மகிழ் திருமேனி நீ ஒரு பேட்டியில் கூறும் பொழுது அந்த காட்சியை அப்படி வைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவே இல்லை. அவளுக்கு தன் தவறு தெரிய வேண்டும் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் அந்த காட்சியில் அஜித் வெளிப்படுத்திய உணர்வுகள் மிக உண்மையாக தத்ரூபமாக இருந்தது.
அஜித் நான் இப்பொழுதும் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியவுடன் திரிஷா அதிக எமோஷன் ஆகிவிட்டார். உடனே அவர் கண்ணீர் விட்டு ஆழ துவங்கி விட்டார். அவராகவே வந்து கட்டி பிடித்து மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் அந்த காட்சியை எழுதிய போது நான் அப்படி எழுதவில்லை கட்டி பிடித்து கண்ணீர் விட்டு அழுவது போன்ற காட்சி கிடையாது இதனாலேயே அதை படத்தில் அதை வைக்க வேண்டுமா வேண்டாமா என்று பல தடவை நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
இருந்தாலும் அந்த கிளைமாக்ஸ் எனக்கு ஏற்புடையதாக இருந்தது அதனால் படத்தில் வைத்தேன் என்று கூறியிருக்கிறார் மகிழ் திருமேனி.
