Connect with us

சூரி அளவுக்குதான் வசூல் வந்திருக்கு.. விஜய் சேதுபதி மார்க்கெட் போச்சா… மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம்!..

maharaja

News

சூரி அளவுக்குதான் வசூல் வந்திருக்கு.. விஜய் சேதுபதி மார்க்கெட் போச்சா… மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம்!..

Social Media Bar

ஒவ்வொரு நடிகர்களுக்குமே அவர்களது ஐம்பதாவது மற்றும் நூறாவது திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். ஏனெனில் 50 திரைப்படம் நடிப்பது என்பது ஒரு நடிகருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா என்ற திரைப்படம். இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாகும். 50-வது திரைப்படம் சொதப்பி விடக்கூடாது என்பதற்காகவே இந்த படத்திற்கு அதிகமாக மெனக்கட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.

இதற்காகவே மிகவும் பிரபலமான பல நடிகர்களை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். மேலும் படத்திற்கான விளம்பரத்திற்காகவும் அதிகமாக உழைத்து உள்ளார் விஜய் சேதுபதி. மேலும் தயாரிப்பாளரும் இந்த திரைப்படத்திற்கு அதிகமாக செலவு செய்தார்.

50 ஆவது திரைப்படம்:

அதற்கு விஜய் சேதுபதிதான் காரணம் என்ற ஒரு பக்கம் கூறப்படுகிறது. எனவே இந்த படம் தோல்வியை கண்டால் அது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்குமே பெரிய தோல்வியாக அமைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

vijay sethupathi maharaja
vijay sethupathi maharaja

சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் மகள் காணாமல் போவதை அடுத்து அதை தேடி அவர் மேற்கொள்ளும் விஷயங்களை வைத்து மகாராஜா திரைப்படத்தின் கதை செல்கிறது. இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட நடித்திருக்கின்றனர்.

முதல் நாள் வசூல்:

ஆனால் படத்தின் வெற்றியை பொருத்தவரை முதல் நாள் வசூல் என்பது குறைவான அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. சூரி நடித்து சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படமே முதல் நாள் மூன்று கோடி வரை வசூல் செய்திருந்தது.

vijay sethupathi maharaja
vijay sethupathi maharaja

ஆனால் தற்சமயம் விஜய் சேதுபதி நடித்து வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படம் 3.80 கோடிதான் வசூல் செய்திருக்கிறது விஜய் சேதுபதி மாதிரியான ஒரு பெரிய நடிகருக்கு இந்த வசூல் என்பது மிகவும் குறைவுதான் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்த திரைப்படம் நேற்றில் இருந்து பேசப்படும் திரைப்படமாக அமைந்துள்ளது.

அதனை தொடர்ந்து பலரும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெறும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top