Connect with us

சிங்கிள் மேன் ஆர்மியாக களம் இறங்கும் விஜய் சேதுபதி!.. மகாராஜா படத்தின் கதை இதுதான்…

vijay sethupathi maharaja

News

சிங்கிள் மேன் ஆர்மியாக களம் இறங்கும் விஜய் சேதுபதி!.. மகாராஜா படத்தின் கதை இதுதான்…

Social Media Bar

ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களது 50 ஆவது திரைப்படம் எப்போதும் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை. விஜயகாந்த் மாதிரியான ஒரு சில நடிகர்களுக்குதான் 50 ஆவது திரைப்படங்கள், 100 ஆவது திரைப்படங்கள் எலலாம் கை கொடுத்திருக்கின்றன.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி வெளியான ட்ரைலரின் வழியாக கதை எப்படி உள்ளது என பார்க்கலாம்.

விஜய் சேதுபதி இண்ட்ரோ:

சலூன் கடை நடத்திவரும் விஜய் சேதுபதி தன்னுடைய மகளை பாசமாக வளர்த்து வருகிறார். அவரது மனைவி இறந்துவிடவே சிறு வயது முதலே மகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் அவரது மகள் காணாமல் போகிறார்.

இதனையடுத்து இதுக்குறித்து போலீசில் கம்ப்ளெயின்ட் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வழக்கை போலீசாக இருக்கும் நடராஜன் கையில் எடுக்கிறார். அந்த வழக்கை முதலில் மற்ற வழக்குகள் மாதிரிதான் பார்க்கிறார் நடராஜன்.

மகளை தேடி பயணம்:

இதனால் போலீஸ் கவன குறைவாக இந்த வழக்கை கையாள்கிறது என நினைக்கும் விஜய் சேதுபதி அவரே ஒரு பக்கம் தனது மகளை தேட துவங்குகிறார். இதற்கு நடுவே இந்த கடத்தலில் பெரிய புள்ளிக்கு தொடர்பு இருப்பது தெரிகிறது.

அதே நிலையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என நடராஜனுக்கும் தொடர்ந்து மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இதில் ஏதோ வில்லங்கம் இருப்பதை அறிந்து விசாரனையை தீவிரப்படுத்துகிறார்.

இதற்கு நடுவே எதிரி அனுராகாஷேப் தன்னுடைய ஆட்கள் மூலம் விஜய் சேதுபதியை தூக்குகிறார். ஆனால் சற்று எதிர்பாராத வகையில் விஜய் சேதுபதி தன்னுடைய சவரக்கத்தியை பயன்படுத்தி வன்முறையில் இறங்குகிறார். அதிலிருந்து அடுத்த பாதி படம் சூடு பிடிக்கிறது.

To Top