News
கல்யாணத்துக்கு அப்புறம் அந்த காரணத்தால் சினிமாவை விட்டு விலகிட்டேன்.. உண்மையை உடைத்த நடிகை மாளவிகா..!
இயக்குனர் சுந்தர் சி மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. மாளவிகாவிற்கு அறிமுகமான காலகட்டங்களில் நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன.
அதில் சில திரைப்படங்கள் அவருக்கு முக்கியமான அடையாளமாகவும் அமைந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மாளவிகாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதற்கு தகுந்தார் போல மாளவிகாவும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
அதற்கு பிறகு அவருக்கு மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் என்கிற அந்த பாடல் அவருக்கு திரும்பவும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
வாய்ப்பு கிடைப்பதில் சிரமம்:
அதற்குப் பிறகு திருட்டு பயலே மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் மாளவிகா. ஆனால் அதுவும் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இடையில் அவர் சினிமாவில் சில காலங்கள் இல்லாமல் போனதுதான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் என்கின்றனர் ரசிகர்கள்.
இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து வந்தேன். ஆனால் கர்ப்பமான பிறகு நடிப்பது என்பது எனக்கு கடினமான விஷயமானது. பிறகு குழந்தை பிறந்த பிறகு நடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன் அப்படியே தாமதமாகிவிட்டது. அதனால் திரும்ப நான் சினிமாவிற்கு வரும்பொழுது எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது என்று கூறி இருக்கிறார் மாளவிகா.
