கண்ட இடத்தில் கை வைத்த ரசிகர்கள்.. சென்னை வந்து வேதனைகுள்ளான மமிதா பைஜு!.
சமூக வலைத்தளம் இணையம் எல்லாம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் நடிகைகள் மிக எளிமையாகவே பிரபலமாகிவிடுகின்றனர். சில நடிகைகள் எல்லாம் ஒரு படத்திலேயே வெகுவாக பிரபலமாகிவிடுகின்றனர்.
ஒரே படத்தில் பிரபலம்:
அப்படியாக பிரேமலு என்கிற ஒரு திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக நடிகை மமிதா பைஜு மாறியுள்ளார். பிரேமலு திரைப்படத்திற்கு முன்பும் கூட இவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் பிரேமலு திரைப்படம் மட்டும்தான் தமிழில் வெளியானது. அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு கதாநாயகியாக மமிதா பைஜு மாறியுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் தயாராகி வரும் வணங்கான் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் இயக்குனர் பாலாவுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டதன் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.
தொடர்ந்து வந்த வாய்ப்புகள்
அதன் பிறகு ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ரெபல் என்கிற திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தார் மமிதா. இந்த நிலையில் அடுத்து பிரேமலு 2 படத்தில் நடிக்க இருக்கிறார் மமிதா பைஜு.

நேற்று சென்னை வி.ஆர் மாலில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மமிதா பைஜு வந்திருந்தார். அப்போது அங்கு சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ரசிகர்கள் கூட்டங்களுக்கு இடையே சிக்கினார் மமிதா பைஜு.
சென்னையில் அசாம்பவிதம்:
இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த சில தவறான இளைஞர்கள் மமிதாவின் அங்கங்கள் மீது கை வைத்துள்ளனர். இருந்தாலும் கூட்டத்தில் இருந்து ஒரு வழியாக விலகி வந்த மமிதா பைஜு இதுக்குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் கூட மலையாள ரசிகர்கள் இந்த நிகழ்வால் அதிக கோபத்தில் இருக்கின்றனர் என கூறப்படுகிறது.