அந்த விஷயத்துக்காக காசு வாங்காமல் படம் நடித்து குடுத்த மம்முட்டி… அவ்வளவுக்கா காஞ்சி போய் கிடக்கு..!
மலையாள தேசத்தில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மம்முட்டி. பெரும்பாலும் நல்ல திரைகதை உள்ள திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் மம்முட்டி.
அதனால்தான் மலையாள சினிமாவில் ஒரு தனித்துவமான நடிகராக மம்மூட்டி பார்க்கப்படுகிறார். அதிக பட்ஜெட் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று விதிமுறைகளை போட்டிருப்பவர் கிடையாது மம்மூட்டி.
தேர்ந்தெடுக்கும் கதைகள்:
ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் அந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும் குறைந்த சம்பளத்திற்கு அந்த படத்தில் நடித்து கொடுக்கக் கூடியவர் சினிமாவை அப்படி ஒரு ஆர்வத்துடன் அணுகக் கூடியவர் மம்முட்டி.

தமிழில் நிறைய திரைப்படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார். அப்படி அவர் தமிழில் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களாக இருக்கும். வெறும் சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்க மாட்டார் மம்முட்டி.
அந்த வகையில் மம்முட்டி மிகவும் விருப்பப்பட்டு நடித்த ஒரு திரைப்படம் ஆனந்தம் இந்த திரைப்படத்தில் மம்முட்டி நடிக்க வேண்டும் என்று லிங்குசாமி கேட்க சென்ற பொழுது நடந்த விஷயங்கள் மிகவும் ஆர்வமூட்டும் வகையாக இருக்கின்றன.
மம்முட்டியிடம் சொன்ன கதை:
லிங்குசாமிக்கு முதல் திரைப்படம் ஆனந்தம் திரைப்படம்தான் கிட்டத்தட்ட இயக்குனர் விக்ரமன் பானியில் அந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் லிங்குசாமி. அதனால் அந்த திரைப்படத்தில் மூத்த அண்ணன் கேரக்டரில் மம்முட்டி நடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

எனவே மம்முட்டியிடம் நேரில் சென்று அந்த கதையை கூறினார். அந்த கதையை கேட்ட மம்முட்டி இது ஒரு சிறப்பான கதை நான் இதில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என்று கூறிவிட்டு அதேபோல சம்பளம் வாங்காமல் நடித்து முடித்திருக்கிறார்.
இருந்தாலும் படத்தின் தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரி அவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அவர் ஒரு தொகையை சம்பளமாக கொடுத்து இருக்கிறார் அந்த அளவிற்கு அப்பொழுது நல்ல கதைக்கு வறட்சி இருந்ததா என்று இது குறித்து கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.