Rajinikanth : தளபதில அந்த ஒரு சீனுக்காக ரொம்ப மெனக்கெட்டார் மணிரத்தினம்… காரணம் இதுதானாம்!..
Thalapathy Rajinikanth Movie : தமிழில் தனித்துவமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். மணிரத்தினத்தின் திரைக்கதையே எப்போதும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
கௌதம் மேனன் கூட மணிரத்தினத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவரது திரைக்கதை பிடித்து போய்தான் கௌதம் மேனன் தனது திரைப்படங்களிலும் மணிரத்னம் திரைப்படத்தில் உள்ளது போலவே வாசகங்களை வைப்பதை பார்க்க முடியும்.
மணிரத்தினம் பொதுவாக திரைப்படங்கள் எடுக்கும் பொழுது அதை ஏதாவது ஒரு புராண கதைகளையோ அல்லது உண்மை நிகழ்வையோ அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதுண்டு. ராவணன் திரைப்படத்தைப் பொறுத்தவரை ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டுதான் அந்த படத்தை எடுத்திருப்பார்.

அதேபோல மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு இவர் எடுத்த கதைதான் தளபதி. கிட்டத்தட்ட கர்ணனின் கதாபாத்திரம்தான் அதில் ரஜினி கதாபாத்திரம் என்று பலருக்கும் தெரியும். அதில் திருமணத்திற்கு முன்பே குழந்தையை பெறும் குந்தி தனது குழந்தையை ஒரு ஆற்றில் சென்று விட்டு விடுவார்.
அதே மாதிரியான காட்சியை படத்தில் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் மணிரத்தினம் ஆனால் அதை அப்படியே வைத்தால் கர்ணன் கதையை அப்படியே ரஜினியை வைத்து எடுத்த மாதிரி ஆகிவிடும். எனவே ஆற்றுக்கும் பதிலாக வேறு ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும் ஆனால் கிட்டத்தட்ட அதுவும் ஆறு மாதிரி தான் இருக்க வேண்டும் என்று யோசித்த பொழுது ரயில் பெட்டியில் வைக்கலாம் என்று யோசனை மணிரத்தினத்திற்கு தோன்றியது.
ஏனெனில் ரயில் பாதையும் ஆறு போலவே வளைந்து நெளிந்துதான் செல்கிறது. கர்ணன் கதையில் கர்ணனை கண்டறிவதற்காக சில விஷயங்களை குந்தி கர்ணனோடு அனுப்புவார். அதேபோல இந்த தாயும் ஒரு போர்வையை வைத்து அனுப்ப வேண்டும் என்று அதுவரைக்கும் யோசித்து முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கினார் மணிரத்தினம்.