கால் மேல் கால் போட்டு பாட்டு பாடினேன் – மணிரத்னத்தை காண்டாக்கிய கார்த்தி

கோலிவுட் சினிமாவில் பெரிய இயக்குனர்கள் என வரிசைப்படுத்தினால், அதில் முக்கியமான இயக்குனராக மணிரத்னம் இருப்பார். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துள்ளார் மணிரத்னம். 

தற்சமயம் அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம், இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அவர் நடித்த சர்தார் திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை கண்டுள்ளது. படம் நடிப்பதற்கு முன்னால் கார்த்தி மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்து வந்தார்.

ஆயுத எழுத்து படத்திற்கு இவர் உதவி இயக்குனராக இருந்துள்ளார். அந்த சமயங்களில் கார்த்தி இயக்குனராக வேண்டும் என்கிற கனவில் இருந்தாராம். ஒருமுறை ஷோபாவில் அமர்ந்திருந்தபோது கால் மேல் கால் போட்டு ஜாலியாக பாட்டு பாடிக்கொண்டு இருந்துள்ளார் கார்த்தி. இதை பார்த்த மணிரத்னம் அவரை முறைத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாராம்.

சர்தார் படத்தின் பேட்டியில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார் கார்த்தி.

Refresh