குறிப்பிட்ட சமூகத்திற்கான திரைப்படமா தங்கலான்? – குவியும் விமர்சனங்கள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமிற்கு மக்களிடையே விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. அவர் நடித்து வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அந்த படத்தில் அவர் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தது பலரையும் ஈர்த்தது.

விக்ரம் என்றாலே வித்தியாசமான கெட்டப்பில் நடிப்பார் என்கிற ஆவல் மக்களுக்கு உண்டு. அதை நிறைவு செய்யும் வகையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம்தான் தங்கலான். இந்த படம் பழைய காலக்கட்டங்களில் நடக்கிறது. பழைய மனிதர்கள் பானியில் வேட்டியை கட்டிக்கொண்டு காட்சியளிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். ஏற்கனவே குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பெருமைப்படுத்தி ரஞ்சித் படம் எடுக்கிறார் என்று சிலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள காவல் வீரர்கள் பெயரே தங்கலான் என கூறப்படுகிறது. எனவே இந்த படமும் கூட அந்த குறிப்பிட்ட சமூகத்தை பெருமைப்படுத்தும் வகையில் இயக்குனர் ரஞ்சித் எடுத்ததா? என்கிற கேள்வி பலரிடையே நிலவி வருகிறது. அதே சமயம் இந்த படத்திற்கு ஆதரவாகவும் பலரும் பேசி வருகின்றனர்.

எப்படி இருந்தாலும் தங்கலான் மக்களிடையே வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டீசரை காண க்ளிக் செய்யவும்

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh