News
கல்யாணத்துக்கு பிறகு இதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்!.. சீக்ரெட்டை உடைத்த மஞ்சுமா மோகன்..
Manjima Mohan: சினிமாவில் ஒரே படத்தில் ஒன்றாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் நமக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள் என்றால் நாம் சொல்வே வேண்டாம். அந்த அளவிற்கு நமக்கு பிடிக்கும். இதனால் இவர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிடும்.
ஆனால் அவ்வாறு திருமணம் செய்துக்காெண்ட சில ஜோடிகள் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்த வருவார்கள். ஆனால் இதில் ஒருசிலர் விதிவிலக்கு தான்.
அந்த வகையில் கடந்த 2022 ஆண்டு திருமணம் செய்து கொண்ட கௌதம் கார்த்திக், மஞ்சுமோகன் ஜோடி அனைவருக்கும் பிடிக்கும். மஞ்சிமா மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு பிறகு வாழ்கையில் எது முக்கியம் என தெரிவித்துள்ளார்.
மஞ்சிமா மோகன் திருமணம்

மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் தமிழில் தேவராட்டம் என்ற படத்தில் ஒன்றாக நடித்த இவர்கள் அந்த படத்தில் இருந்து காதலித்து வந்தார்கள். இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு மஞ்சிமாவை எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை.
திருமணத்திற்கு பிறகு இது தான் முக்கியம்
தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ள மஞ்சிமா மோகன், திருமணத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். அந்தவகையில் நமக்கு பிடித்தது எல்லாம் நம்முடைய பார்ட்னருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் நானும், கெளதமும் டைட்டில் இருப்போம். ஆனால் எனக்கு சீஸ் பிடிக்கும். ஆனால் கெளதம் சீஸ் விரும்பமாட்டார். அதனால் நான் அவரை கட்டாயப்படுத்த மாட்டேன். மேலும் சில வருடங்களுக்கு பிறகு பிடித்த விஷயம் பிடிக்காமல் போகலாம். எனவே இருவரும் அதிகமாக பேசி ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வது அவசியம். இவ்வாறு இவர் கூறியிருக்கும் பேட்டியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் மஞ்சிமா மோகன் மெச்சூரிட்டியாக பேசுகிறார் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
