இத்தனை வருஷ தமிழ் சினிமாவில் அதை மனோபாலா மட்டும்தான் எனக்கு செஞ்சார்..! – கே.ராஜன்…
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் சிறந்த இயக்குனராகவும் இருந்தவர் நடிகர் மனோபாலா. அவர் ஒரு இயக்குனர் என்பதை விட ஒரு நகைச்சுவை நடிகராகதான் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படுகிறார்.
நகைச்சுவை நடிகராக பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் மனோபாலா. மனோபாலா நடித்த திரைப்படங்களில் சிறுத்தை, அரண்மனை போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இருந்து மறையாத திரைப்படங்களாக உள்ளன.
இயக்குனர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பலப் படங்களை தயாரித்துள்ளார். மனோபாலா அவர் இயக்கிய திரைப்படங்களிலும் தயாரித்த திரைப்படங்களிலும் பல நடிகர்களுக்கு வாய்ப்புகளை தந்துள்ளார். இப்படியாக மனோபாலாவால் வாய்ப்பு பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் தமிழகத் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தை சேர்ந்த கே.ராஜன் அவர்கள்.

அப்போது கே.ராஜன் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் பெரிய கதாபாத்திரங்கள் வழங்கப்படவில்லை. இந்த சமயத்தில் மனோபாலா 2017 ஆம் ஆண்டு பாம்பு சட்டை என்கிற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹாவும் கீர்த்தி சுரேஷும் நடித்திருந்தனர் இதில் வில்லனாக நடிப்பதற்கு கே.ராஜனை நேரில் சென்று கேட்டார் மனோபாலா.
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்ததால் கே.ராஜனுக்கு அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் மனோபாலா கண்டிப்பாக கே.ராஜன்தான் நடிக்க வேண்டும் என கூறிவிட்டார் அதனை அடுத்து அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லனாக கே.ராஜன் நடித்திருந்தார் அவர் ஒரு பேட்டியில் கூறும்போது எனக்கு பெரிய கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு கொடுத்த ஒரே மனிதர் மனோபாலா மட்டும்தான் என கூறியுள்ளார்.