Connect with us

காதலா பண்ற!.. பையன் காதலில் பாரதி ராஜா செய்த வேலை!.. ஆனால் எதுவும் பலிக்கலை!.

bharathiraja manoj

Cinema History

காதலா பண்ற!.. பையன் காதலில் பாரதி ராஜா செய்த வேலை!.. ஆனால் எதுவும் பலிக்கலை!.

Social Media Bar

Actor Manoj Bharathiraja : தமிழ் இயக்குனர்களிலேயே, இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து கிராமம் சார்ந்த பல படங்களை இயக்கினார்.

கிராமத்தில் இருக்கும் சாதாரண ஒரு மனிதன்தான் பாரதிராஜா திரைப்படத்தின் கதை நாயகனாகவே இருப்பார். அது மட்டுமின்றி கிராமத்தில் சாதாரணமாக இருந்து வந்த நடிகர் பாண்டியனை சினிமாவிற்கு கொண்டு வந்தவரும் பாரதிராஜாதான்.

குறைந்த பட்ஜெட்டில் பெரும் ஹிட் படங்களை கொடுப்பதால் பாரதிராஜாவிற்கு அப்போது வரவேற்பு அதிகமாக இருந்தது. பாரதிராஜாவிற்கு பிறகு அவரது மகன் மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த நிலையில் அவர் கதாநாயகன் ஆவதற்கு பாரதிராஜா உதவி செய்தார்.

தாஜ்மஹால் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. இவர் 2005 இல் சாதுரியன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நந்தனா நடித்தார். இந்த நிலையில் நடிகை நந்தனாவிற்க்கும் மனோஜ் பாரதிராஜாவிற்கும் காதல் ஏற்பட்டது.

எப்படியோ இந்த விஷயம் நந்தனாவின் வீட்டிற்கு தெரிந்து போக அவர் வீட்டில் வசமாக சிக்கிக்கொண்டார் நந்தனா. இந்த நிலையில் இந்த விஷயத்தை கண்டிப்பாக பாரதிராஜாவிடம் சொல்ல வேண்டிய நிலை மனோஜிற்கு ஏற்பட்டது.

ஆனால் படங்களில் காதலை வாழவைத்த பாரதிராஜா தனது மகனின் காதலுக்கு எதிராகவே இருந்துள்ளார். பெண் பார்க்க போய்விட்டு அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு வந்து விடுங்கள் என்று கூறி உறவினர்களை நந்தனாவின் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார் பாரதிராஜா.

ஆனால் நந்தனாவின் குடும்பத்தார் கொஞ்சம் பெரிய இடம் என்று கூறலாம் அதனை கண்ட மனோஜின் சித்தப்பா பாரதிராஜாவிற்கு ஃபோன் செய்து இந்த பெண்ணை விட நல்ல பெண் உன் மகனுக்கு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார். அதனை அடுத்து நந்தனாவையே திருமணம் செய்து இருக்கிறார் மனோஜ் இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

To Top