Tamil Cinema News
மைக் புடிச்ச பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்கலாமா!.. மேடையிலேயே லெஃப்ட் ரைட் வாங்கிய மன்சூர் அலிக்கான்…
லோகேஷ் கனகராஜ் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டான நடிகராக மாறி வருகிறார் நடிகர் மன்சூர் அலிக்கான். லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிக்கானின் பெரும் ரசிகராவார்.
இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் மன்சூர் அலிக்கான் ஆடும் பாடல் ஒன்றையும் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்து லியோ படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே மீண்டும் மார்க்கெட்டை பிடித்ததை அடுத்து மன்சூர் அலிக்கான் பல படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தற்சமயம் சரக்கு என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
அதற்கு வந்த நடிகர் கூல் சுரேஷ் சும்மா இல்லாமல் அங்கு இருக்கும் தொகுப்பாளினியான ஐஸ்வர்யா ரகுபதிக்கு மாலை போட்டுவிட்டார். இதனை தொடர்ந்து அங்கு சர்ச்சை நிலவியது. பிறகு மேடைக்கு வந்த மன்சூர் அலிக்கான், கூல் சுரேஷை மேடைக்கு வரவழைத்து அவரை மன்னிப்பு கேட்க செய்தார். மேலும் இது தப்பு என மன்சூர் அலிக்கானே கூறியிருந்தார்.
