Connect with us

போய் பொழப்ப பாருங்கய்யா!.. இது ஒரு பிரச்சனைனு வந்துக்கிட்டு!. த்ரிஷா பிரச்சனை குறித்து பேசிய மன்சூர் அலிக்கான்!..

trisha mansoor alikhan

News

போய் பொழப்ப பாருங்கய்யா!.. இது ஒரு பிரச்சனைனு வந்துக்கிட்டு!. த்ரிஷா பிரச்சனை குறித்து பேசிய மன்சூர் அலிக்கான்!..

Social Media Bar

trisha and mansoor alikhan: தமிழ் சினிமா நடிகர்களில் வெகு காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிக்கான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் த்ரிஷா குறித்து தவறாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவை அடுத்து இதனால் கோபமான த்ரிஷா மன்சூர் அலிக்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மன்சூர் அலிக்கான் பேசியது தவறு என்று கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் பதிவிட்ட நிலையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. தற்சமயம் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு மன்சூர் அலிக்கான் விளக்கமளித்தப்போது ” அய்யா’ பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.

உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.

திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. என விளக்கமளித்துள்ளார் மன்சூர் அலிக்கான்!.

To Top