தற்போது வெள்ளித்திரை நடிகைகளை விட அதிக அளவு பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரை நடிகைகள் தான். அந்த வகையில் தற்போது அனைவருக்கும் பரிச்சையமானவராக இருப்பவர் சுந்தரி சீரியலில் நடித்து வரும் அனு என்னும் நடிகை பெயர் தான் ஸ்ரீ கோபிகா.
இவர் சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என புகைப்படங்களை பகிர்ந்த இருந்த நிலையில் தற்போது எங்களுடைய நிச்சயதார்த்தம் ரத்து செய்து விட்டதாக தெரிவித்திருக்கும் செய்தி அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஸ்ரீ கோபிகா
ஸ்ரீ கோபிகாவை அவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் சீரியல் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் சின்னத்திரை ரசிகர்கள் இவரை பார்த்தாலே பயங்கரமான ஆளாச்சே என்று நினைக்கும் அளவிற்கு சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களரயும் தன்வசப்படுத்தி உள்ளவர்.
தற்போது சுந்தரி சீரியலில் நடித்து வரும் ஸ்ரீ கோபிகா இந்த சீரியலில் கடந்த இரண்டு வருடமாக கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வந்தார். இதனால் இவரை கலாய்த்து பல மீம்ஸ்களும், ட்ரோல்களும் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பிரபலம் அடைந்த சுந்தரி சீரியல் ஸ்ரீ கோபிகா, அன்பே வா சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
திருமணம் நிற்பதற்கு இதான் காரணம்
இந்நிலையில் நடிகர் வைசாக் ரவி என்பவரை எட்டு வருடங்களாக காதலித்து வருவதாகவும் தற்போது எங்களுடைய காதல் நிச்சயதார்த்தத்தில் முடிந்திருக்கிறது. விரைவில் நாங்கள் திருமணம் செய்ய கொள்ள போகிறோம் என புகைப்படங்களை பதிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் நடிகை ஸ்ரீ கோபிகா.
இவர் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்ட நிலையில் சின்னத்திரையில் உள்ள பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதிலும் முக்கியமாக சுந்தரி சீரியலில் அனுவின் கணவராக நடித்த ஜிஸ்னு மோகன் தன்னுடைய வாழ்த்தை முதல் ஆளாக தெரிவித்து வந்தார்.
மேலும் ஸ்ரீ கோபிகாவின் ரசிகர்களும் ஜோடி பொருத்தம் அழகாக இருக்கிறது என பல கமெண்ட்கள் செய்து வந்த நிலையில், தற்போது ஸ்ரீ கோபிகா எங்களுடைய திருமணம் நின்று விட்டது என கூறியிருக்கும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் அவர் பதிவிட்ட பதிவு ஒன்றில், எல்லோருக்கும் வணக்கம். இந்த பதிவின் மூலமாக நான் என்னுடைய நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து விட்டேன் என பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் இந்த நேரத்தில் உங்களுடைய ஆதரவும், புரிதலும் எங்களுக்கு தேவை என்றும் நாங்கள் திட்டமிட்டபடி எங்களுடைய திருமணம் நடக்கவில்லை. நாங்கள் இருவருமே இதை கடந்து செல்லலாம் என முடிவெடுத்து இருக்கிறோம். என்று ஸ்ரீ கோபிகா வருத்தமாக தன்னுடைய சமூக வலைதள பதிவின் மூலம் திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறி இருக்கிறார்