Hollywood Cinema news
மீண்டும் மார்வெலுக்கு வரும் அயர்ன் மேன்.. குஷியில் ரசிகர்கள்!.
தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஹாலிவுட் சினிமா மீது அதிகமாக ஆர்வம் கொண்டவர்கள். விஜய் டிவியில் எப்போது ஹாலிவுட் டப்பிங் படங்கள் என்கிற விஷயம் துவங்கியதோ அப்போது முதலே அதிக ஆர்வம் கொண்டு ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.
இதற்கு நடுவே மார்வெல் சினிமாவிற்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. மார்வெல்லில் வரும் திரைப்படங்கள் மீது அவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். மார்வெல் 20 வருடங்களுக்கு முன்பு சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற விஷயத்தை உருவாக்கியது.
பல படங்களை இயக்கி அவற்றையெல்லாம் ஒரு படத்தில் இணைப்பதுதான் அதன் கான்செப்டாக இருந்தது. அந்த வகையில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் இரண்டு படங்களும் முதல் செக்ஷன் மார்வெல் ஹீரோக்களுக்கு கடைசி படமாக இருந்தது.
மனம் கவர்ந்த கதாபாத்திரம்:
எண்ட் கேம் திரைப்படத்தில் பலரது மனதை கவர்ந்த கதாபாத்திரமான அயர்ன் மேனான ராபர்ட் டோனி ஜே.ஆர் இறந்துவிட்டதாக கதை அமைந்திருந்தது. அது பலருக்கும் கவலையை அளித்து வந்தது. அதற்கு பிறகு புது அவெஞ்சர்ஸ் என்கிற அத்தியாயம் துவங்கியது.

முன்பு அவெஞ்சர்ஸில் முக்கியமான ஆட்களாக இருந்த அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, நடாஷா, ஹல்க், ஹாக்கய் போன்ற யாருமே இதில் இருக்க மாட்டார்கள் என கூறப்பட்டது. மேலும் இதில் ஸ்பைடர் மேன், கேப்டன் மார்வெல், மிஸ் மார்வெல் மாதிரியான புது ஆட்கள் களம் இறங்குகின்றனர்.
மேலும் ஃபால்கன் கதாபாத்திரம் இதில் கேப்டன் அமெரிக்காவாக வருகிறார். அடுத்து இவர்களை எல்லாம் வைத்துதான் கதை செல்லும். பழைய அவெஞ்சர்ஸ் டீமில் இருந்து டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் தோர் ஆகியோர் இருப்பார்கள் என தெரிகிறது.
புது கதாபாத்திரம்:
இந்த நிலையில் அடுத்து வர இருக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே திரைப்படத்தில் ராபர்ட் டோனி ஜே.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகார அறிவிப்புகள் வந்துள்ளன.
இந்த திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் டாக்டர் டூம் என்கிற பெரும் வில்லன்தான் அவெஞ்சர்ஸ்க்கு எதிராக வர போவதாக கூறப்பட்டது.
சமீபத்தில் சாண்டியாகோவில் நடைப்பெற்ற காமிக் கான் விழாவில் டாக்டர் டூமாக யார் நடிக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார்கள். அப்படி வெளிப்படுத்தும்போது டூம்ஸ் மாஸ்கை போட்டுக்கொண்டு ராபர்ட் டோனி வந்திருந்தார். இது மார்வெல் ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
