Box Office
பொங்கலுக்கு கேம் சேஞ்சராக அமைந்த மதகஜராஜா… மூன்றாவது நாள் நடந்த அதிசயம்.. வசூல் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஏனெனில் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்குவதற்கு தமிழில் நிறைய இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால் காமெடி திரைப்படங்களை இயக்குவதற்கு சுந்தர் சி மாதிரியான இயக்குனர்கள்தான் இருக்கிறார்கள்.
சுந்தர் சி 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய திரைப்படம் மதகஜராஜா. தற்சமயம் பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியானது. அதில் மதகஜராஜா திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். ஜனவரி 12 அன்று வெளியான மதகஜராஜா முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அதன் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா.
பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே தற்சமயம் அதிக வசூல் கொடுத்த தமிழ் படமாக மதகஜராஜாதான் இருந்து வருகிறது. மதகஜராஜா வெளியான முதல் நாள் 3 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளும் 3 கோடிதான் வசூலித்தது.
ஆனால் மூன்றாவது நாள் மட்டும் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இதன் வசூல் அதிகரித்தால் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.