Box Office
12 வருசம் கழிச்சி வந்த படத்துக்கு இவ்வளவு மார்க்கெட்டா? புதிய சாதனையை படைத்த மதகஜராஜா திரைப்படம்.!
வெகு வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இப்போதெல்லாம் ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தனிப்பட்ட வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ரீ ரிலீஸ் ஆகாமல் இருந்த படமாக மதகஜ ராஜா திரைப்படம் இருந்து வந்தது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், மனோபாலா, அஞ்சலி, வரலெட்சுமி இன்னம் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சந்தித்த சில பிரச்சனைகளின் காரணமாக அந்த திரைப்படம் திரைக்கு வராமலேயே இருந்தது.
ஆனால் திடீரென இந்த மாதம் படம் வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதனை தொடர்ந்து அந்த படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தில் நடித்த அஞ்சலிக்கும் இந்த படம் நல்ல மார்க்கெட்டை பிடித்து கொடுத்தது.
இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் மதகஜ ராஜா திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் மதகஜ ராஜா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
அதாவது மதகஜராஜா திரைப்படம் கடந்த 24 மணி நேரத்தில் ஆன்லைன் மூலமாக 75,000 டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளன. 12 வருடம் கழித்து வந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம் என கூறப்படுகிறது.
