Tamil Cinema News
இவ்வளவு விலையா.. மதராசி படத்தால் அதிர்ந்து போன விநியோகஸ்தர்கள்.!
அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படம் குறித்து கொஞ்சம் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது ஆனால் பராசக்தி படம் அளவிற்கு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை அமரன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்ததால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது அதிகரித்துவிட்டது.
அதனால் மதராசி திரைப்படத்திற்கான வினியோக தொகையை அதிகமாக கேட்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். அமரன் திரைப்படம் ராணுவம் சார்ந்த திரைப்படம் மேலும் ஒரு உண்மையான ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் அந்த படம் ஓடிவிட்டது.
அதே மாதிரி மதராசி திரைப்படம் ஓடிவிடும் என்று கூற முடியாது எனவே விநியோகஸ்தர்கள் இந்த விஷயத்தில் யோசனையில் இருக்கின்றனர்.
