Connect with us

பிரதீப்பிற்குதான் இந்த வாரம் எலிமினேஷனா!.. ஆண்டவர் எடுத்த முடிவு என்ன?

pradeep

Tamil Cinema News

பிரதீப்பிற்குதான் இந்த வாரம் எலிமினேஷனா!.. ஆண்டவர் எடுத்த முடிவு என்ன?

Social Media Bar

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதலே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. நிகழ்ச்சி தொடர்ந்த ஆரம்ப கட்டத்தில் போட்டியாளர் பிரதீப்பிற்கு அதிக வரவேற்பு இருந்தது.

ஆனால் போகப் போக அவர் பலரிடமும் அத்துமீறி பேசி வந்ததால் பிரதீப் குறித்து மக்கள் மத்தியிலும் மனக்கசப்பு இருந்து வந்தது. போன சீசனில் இப்படிதான் அசீம் மிகவும் ஓவராக செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர்தான் பிக்பாஸில் ஜெயித்தார். எனவே பிரதீப்பும் அதையே செய்கிறார் என்று மக்கள் மத்தியில் பேச்சுக்கள் உள்ளன.

அதேபோல ஏற்கனவே போட்டியாளாக இருக்கும் மாயா மாதிரியான சில போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேஷன் ஆகப் போகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரதீப்தான் இந்த வாரம் எலிமினேஷன் ஆகிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் இன்னும் உறுதியான தகவல்கள் வரவில்லை என்றாலும் மக்கள் மத்தியிலும் பிரதீப் நீங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top