Connect with us

Maya and Nixen: நிக்சன் ஐஸ்வர்யா சீக்ரெட்டா என்கிட்ட சொன்னாங்க!.. மீண்டும் நிக்சனை இழுத்து தெருவில் விட்ட மாயா!.. அட பாவமே!.

nixen maya

Bigg Boss Tamil

Maya and Nixen: நிக்சன் ஐஸ்வர்யா சீக்ரெட்டா என்கிட்ட சொன்னாங்க!.. மீண்டும் நிக்சனை இழுத்து தெருவில் விட்ட மாயா!.. அட பாவமே!.

Social Media Bar

Maya Nixen Biggboss Tamil : கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் அதிகமாக பேசப்படும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். தொடர்ந்து கமல்ஹாசனும் நிக்சனுக்கு ஆதரவாக செய்த விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் வெளியில் சென்று அரசியல் செய்யட்டும். எதற்கு பிக் பாஸில் வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார். வடசென்னை மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டுமா. என்றெல்லாம் கூறி அவரை போனவாரம் விமர்சித்து வந்தனர்.

இதனையடுத்து கமலும் பிக் பாஸ் விட்டு கிளம்ப போவதாக கூட பேச்சுக்கள் இருந்து வருகின்றன. நிக்சன் ஐஸ்வர்யா இவர்கள் இடையேயான காதல் தான் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அது கமல்ஹாசன் பேசிய பிறகு போன வாரத்தோடு முடிந்திருக்கும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் இந்த வாரம் அந்த டாப்பிக்கை மாயா திரும்ப ஓபன் செய்துள்ளார்.  பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 75 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது பேசிய மாயா நிக்சனும் ஐஸ்வர்யாவும் என்னிடம் ஒரு சீக்ரெட் கூறினர் என்று அதை பேச வந்தார். இதனால் மிகவும் கடுப்பாகிவிட்டார் நிக்சன். ஏனெனில் யாரும் தெரிந்து கொள்ள கூடாத ஒரு ரகசியமாக அதை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது அதனால் கோபமானவர் எதற்கு என்னுடைய சொந்த விஷயத்தை இங்கு பேசுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதனை அடுத்து பிரச்சனை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top