Connect with us

அதை மட்டுமே செஞ்சு ஜெயிச்சிட முடியாது.. நடிக்கவும் தெரியணும்.. மீனாட்சி சௌத்ரி குறித்து இப்படி ஒரு பேச்சா..?

Tamil Cinema News

அதை மட்டுமே செஞ்சு ஜெயிச்சிட முடியாது.. நடிக்கவும் தெரியணும்.. மீனாட்சி சௌத்ரி குறித்து இப்படி ஒரு பேச்சா..?

Social Media Bar

பெரும்பாலும் நடிக்க தெரியவில்லை என்றாலும் கூட சினிமாவில் கவர்ச்சி காட்டி மட்டுமே அதிக பிரபலம் அடைய முடியும் என்று நிறைய நடிகைகள் நினைத்து வருகின்றனர்.

அப்படியான நடிகைகளில் தமன்னா, மாளவிகா மோகன் போன்றவர்களை கூறலாம். இவர்கள் எல்லாம் நடிப்பை காட்டிலும் அவர்களுடைய கவர்ச்சி மீது தான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து அதன் மூலமாகதான் வரவேற்புகளையும் பெறுகின்றனர் இதனால் சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பவர்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைக்கும் என்கிற ஒரு பிம்பம் உருவாகியிருக்கிறது.

ஆனால் எல்லா காலங்களிலுமே இந்த பிம்பத்தை சில நடிகைகள் உடைத்து கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையில் நன்றாக நடிக்க தெரியும் நடிகைகளுக்கு கவர்ச்சி ஒரு தேவையாக இருப்பது கிடையாது.

இதனை நிரூபித்து இருக்கிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி. மீனாட்சி சௌத்ரி தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்புகளை பெற்று வருகிறார்.

தமிழில் சிங்கப்பூர் சலூன் என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் அவருக்கு கவர்ச்சி காட்சிகள் என்று எதுவும் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அதிக கவர்ச்சியாக நடித்திருந்தார் மீனாட்சி சௌத்ரி. ஆனால் அந்த திரைப்படத்தை விடவுமே லக்கி பாஸ்கர் திரைப்படம் தான் அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது ஆனால் அந்த திரைப்படத்தில் ஒரு டூயட் சாங் கூட மீனாட்சி சௌத்ரிக்கு கிடையாது.

அவருடைய தனிப்பட்ட நடிப்புதான் அவருக்கு அந்த படத்தில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது பற்றி ரசிகர்கள் இணையதளத்தில் பேசும் பொழுது கவர்ச்சி காட்டி தான் நடிகர்கள் ஜெயிக்க முடியும் என்கிற முறையை மாற்றி இருக்கிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி.

எனவே அவருக்கு இனி கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் கிடையாது நன்றாக நடித்தாலே அவர் பெரிய இடத்தை பிடிப்பார் என்று கூறி வருகின்றனர்.

Bigg Boss Update

To Top