Tamil Cinema News
படம் முடிஞ்சதும் 10 நாள் நடிகையுடன்… பிரபல இயக்குனருக்கு இருக்கும் பழக்கம்.. வெளியான பகீர் தகவல்..!
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர்களுக்கு அதிக மதிப்புகள் இருந்தது. நடிகர்களை விட இயக்குனர்களைதான் பலரும் மதித்து வந்தனர்.
பாக்கியராஜ், பாரதிராஜா மாதிரியான இயக்குனர்கள் இருந்த காலக்கட்டத்தில் சினிமாவின் நிலை இப்படிதான் இருந்தது. ஆனால் காலங்கள் செல்ல செல்ல ஹிட் திரைப்படங்கள் கொடுக்கும் நடிகர்கள் குறைய துவங்கினர்.
அதே போல மக்களும் குறிப்பிட்ட சில நடிகர்களை மட்டுமே விரும்ப துவங்கினர். இதனால் இயக்குனர்களை விட இந்த நடிகர்களுக்கு மதிப்பு அதிகரித்தது. அந்த அளவிற்கு கதாநாயகர்கள் இப்போது மதிப்பு மிக்கவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் அப்போதைய காலக்கட்டங்களில் மிகவும் பிரபலமானவராக இருந்தவர் இயக்குனர் ராமநாராயணன். பெரும்பாலும் ராமநாராயணன் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக இருந்து வந்தது.
அவர் இயக்கும் படங்களில் பெரும்பாலும் குரங்கு, பாம்பு, யானை போன்ற விலங்குகளை ராமநாராயணன் பயன்படுத்துவார். அதை பார்க்கவே ஒரு கூட்டம் வரும். அவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருந்தார் என்றால் 1985 ஆம் ஆண்டு மட்டும் அவரது இயக்கத்தில் 16 திரைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில் அவரை குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஒவ்வொரு முறையும் படம் ஹிட் கொடுத்தப்பிறகு அதிலிருந்து ஒரு 5 லட்சத்தை ஒதுக்கி ஹோட்டலில் ரூம் போட்டுவிடுவார்.
படத்தின் நடிகையும் அவருடன் தான் இருப்பார்கள். நான் தப்பாக எதுவும் கூறவில்லை. இருவரும் அடுத்த படத்திற்கான டிஸ்கஸனில் இருப்பார்கள் என கூறியுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.