Tamil Cinema News
அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள் இதை செய்வாங்க.. எளிதா கண்டுப்பிடிக்கலாம்.. வெளிப்படையாக கூறிய நடிகை மனிஷா கொய்ராலா..!
பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட்டில் அதிக பிரபலமாக இருந்த நடிகையாவார்.
அவரது இளமை காலங்களில் அப்போது ஹிந்தியில் பிரபலமாக இருந்த கஜோல், ப்ரீத்தி சிந்தா மாதிரியான பல நடிகைகளுக்கு இவர் போட்டி நடிகையாக இருந்தார். இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது.
தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் பிரச்சனை ஏற்பட்டது. மிக கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா. தமிழில் அவர் இறுதியாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் பாபா.
அந்த படத்திற்கு பிறகு அவருக்கு கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் மாப்பிள்ளை மாதிரியான படங்களில் தொடர்ந்து அவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த நிலையில் இந்த புற்றுநோய் பிரச்சனை குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் சினிமாவில் நடிக்க துவங்கியப்போது கேமிரா முன்பு நிற்கவே பயமாக இருக்கும். அதற்காக எனது நண்பர்கள் எனக்கு மதுவை அறிமுகப்படுத்தினர்.
பிறகு அதுவே எனக்கு பழக்கமானது. அதனால்தான் இந்த புற்றுநோய்க்கு நான் ஆளானேன். எனவே யாரும் மது அருந்தாதீர்கள். வருடத்தில் எப்போதாவது குடித்தால் பரவாயில்லை. பிரச்சனைகளுக்கு தீர்வாக மதுவை எடுத்தோம் என்றால் அதுவே ஒரு பிரச்சனையாக மாறிவிடும் என கூறியுள்ளார் மனுஷா கொய்ராலா.
மேலும் அவர் கூறும்போது சினிமாவில் நிறைய அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக்கொண்டவர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் பெரும்பாலும் பேட்டிகளில் பேசும்போது யாரிடமும் அட்ஜெஸ்ட்மெண்டில் இருந்ததில்லை என கூறுகிறார்கள்.
அப்படி கூறுகிறார்கள் என்றாலே அவர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டார்கள் எனதான் அர்த்தம் என கூறியுள்ளார் மனுஷா கொய்ராலா.