விஜய்யை வைத்து அடுத்த படம்.. மூன்று கதைகள் இருக்கு.. அப்டேட் கொடுத்த மகிழ் திருமேணி.!
மகிழ் திருமேணி தமிழில் மீகாமன் கலகத்தலைவன் மாதிரியான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். தமிழில் பல படங்களை இயக்கியும் கூட அவருக்கு அதிக விளம்பரத்தை பெற்று கொடுத்திருக்கும் படம் விடாமுயற்சிதான். அதுவரை மகிழ் திருமேனியின் பெயரை அறியாதவர்கள் கூட அவரை குறித்து ஆராய துவங்கினர்.
அவரது இயக்கத்தில் வந்த மீகாமன் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அப்போதே லோகேஷ் கனகராஜ் போல அந்த படத்தை உருவாக்கி இருந்தார் மகிழ் திருமேனி. அதனால்தான் அவருக்கு அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி திரையரங்கிற்கு வர இருக்கிறது. இது கண்டிப்பாக நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா என பல முக்கிய பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே விஜய்யிடம் சென்று கதை சொன்ன அனுபவத்தை மகிழ் திருமேணி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் பேசிய மகிழ் திருமேணி ஆரம்பத்தில் நடிகர் விஜய்யிடம் சென்று மூன்று கதைகளை கூறினேன்.
மூன்று கதைகளையும் அவர் பொறுமையாக கேட்ட பிறகு நீங்கள் என்னை குழப்பி விட்டீர்கள். மூன்றில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதை மட்டும் சொல்லுங்கள் என கூறினார். அப்படி அவர் கூறியதை என்னால் மறக்கவே முடியாது.
ஆனால் தற்போது உள்ள சூழலுக்கு அந்த மூன்று கதைகளுமே விஜய்க்கு மட்டுமே பொருத்தமான கதைகள் என கூறியுள்ளார் மகிழ் திருமேனி. இந்த நிலையில் நடிகர் விஜய்யை வைத்து திரைப்படம் எடுப்பதற்கு ஆசைப்படுகிறார் மகிழ் திருமேணி. அதை விஜய்யிடம் இப்படி மறைமுகமாக அவர் கூறுகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.