Tamil Cinema News
அமெரிக்காவையே உலுக்கிய வெப் சீரிஸ்.. யார் இந்த மெனண்டெஸ் ப்ரதர்ஸ்?
ஹாலிவுட்டில் எடுக்கப்படும் வெப் சீரிஸ்களில் நிறைய வகை உண்டு. காதல் தொடர்பான வெப் சீரிஸ்கள் ஒரு பக்கம் என்றால் மர்மமான வெப்சைட் சொல் மறுபக்கம் எடுக்கப்படும் இதற்கு நடுவே நிஜ கதைகளை தழுவி வரும் வெப் தொடர்களும் நிறைய இருக்கின்றன.
வெப் சீரிஸ்களை அதிகம் எடுப்பதில் netflix நிறுவனம்தான் முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நெட்ப்லிக்ஸ் எடுத்த மெனன்டஸ் பிரதர்ஸ் என்கிற வெப் சீரிஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் உண்மையிலேயே இருந்த கொலைகார சகோதரர்கள் ஆவார்கள் இவர்கள் செய்த கொலைகள் பற்றி அப்பொழுதே அதிகமாக பேசப்பட்டது அதனை தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீன் இல்லாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.
சமீபத்தில்தான் அவர்களது சிறை தண்டனை குறைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இதில் எவ்வளவு கொடூரமான முறையில் இவர்கள் இந்த கொலைகளை செய்திருக்கின்றனர் என்பதை வெளிப்படையாக காட்டி இருக்கின்றனர். இது மீண்டும் அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
