News
வாலி கண்ணதாசன் பாடல்களில் எனக்கு பிடித்த ஐந்து பாடல்கள்!.. லிஸ்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்!.
பல பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்கள் அவர்கள் மறைந்தாலும், இன்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும். மேலும் சில பாடலாசிரியர்கள் ஒரு சில நடிகர்களுக்கு எழுதும் போது அந்தப் பாடல் அந்த நடிகர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கும். கவிஞர் வாலி மற்றும் கண்ணதாசனை நம் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாத கவிஞர்களாக.
அந்த வகையில் இந்த இருவர்களின் பாடல்களும் எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களில் வெளிவந்து அவரை மக்களிடையே கொண்டு சென்று இருக்கிறது. இந்நிலையில் வாலி, கண்ணதாசன் எழுதிய பாடல்களில் ஐந்து பாடல்கள் பற்றி ஒரு ரேடியோ இன்டர்வியூவில் எம்.ஜி.ஆர் கூறியிருக்கும் செய்தி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
படகோட்டி திரைப்படம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இதில் சூழ்ச்சிக்கார ஜமீன்தாராக எம் என் நம்பியார் தோன்றுகிறார்.

இந்த படத்தில் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்னும் பாடல் கவிஞர் வாலியால் எழுதப்பட்டு டி எம் சௌந்தரராஜன் பாடியிருப்பார். இது குறித்து எம்ஜிஆர் கூறும் பொழுது வாலி எழுதிய பாடல்களில் என்னை முதலில் கவர்ந்த பாடல் இது என அவர் கூறியிருக்கிறார்.
கண் போன போக்கிலே
1965 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் பணம் படைத்தவன் இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர், சவுகார் ஜானகி, கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வரும் கண்போன போக்கிலே என்ற பாடல் கவிஞர் வாலியால் எழுதப்பட்டு டி எம் சௌந்தரராஜன் பாடியிருப்பார். இந்தப் பாடல் பற்றி எம்ஜிஆர் கூறும் பொழுது நான் இறந்த பிறகும் இந்த பாடல் எனக்காக இருக்கும் என கூறியிருக்கிறார்.
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
தாயைக் காத்த தனயன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இதில் வரும் கட்டி தங்கம் வெட்டி எடுத்து என்ற பாடல் டி எம் சௌந்தரராஜன் பாடியிருப்பார்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இத்திரைப்படம் 1963 ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். அதில் எம்ஜிஆர் மற்றும் சரோஜா தேவி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வரும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார்.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த என் அண்ணன் திரைப்படத்தில் இந்த நெஞ்சமுண்டு நேர்மை உண்டு என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடலை கண்ணதாசன் எழுத டி. எம் சௌந்தரராஜன் பாடியிருப்பார். மேலும் இப்பாடலுக்கு கே.வி மகாதேவன் இசையமைத்திருப்பார். இந்த பாடல் பற்றி எம்.ஜி.ஆர் கூறும் போது இந்த பாடல் பாடலுக்காக ஒரு மோதிரம் ஒன்றை கண்ணதாசனுக்கு பரிசளித்ததாக கூறினார். மேலும் இந்த பாடல் தற்போது வரை பிரச்சார மேடைகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாடல் ஆகும்.
