Cinema History
அப்பவே பேச்சை கேட்டு இருக்கணும்!.. எம்.ஜி.ஆரை மதிக்காமல் நடிகை எடுத்த முடிவு…
தமிழ் சினிமாவில் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என்று பல புனைப் பெயர்களால் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவிலேயே எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிற்கு ரசிக பட்டாளம் இதுவரை தமிழில் உள்ள எந்த ஒரு நடிகருக்குமே கிடையாது எனலாம்.
அதே அளவிற்கான ஆளுமை அவருக்கு சினிமாவிலும் இருந்தது. சினிமாவில் அவரால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடிந்தது. இதனால் சினிமா பிரபலங்களுக்கும் கூட எம்.ஜி.ஆர் குறித்து நல்ல மரியாதை இருந்து வந்தது இந்நிலையில் நடிகை சச்சு சின்ன வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவாஜி எம்ஜிஆர் இருவருடனும் பல படங்களில் சிறுவயதிலேயே நடித்துள்ளார், குழந்தை கதாபாத்திரத்தில் சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கொஞ்சம் வளர்ந்த பிறகு தன்னுடைய 14 ஆவது வயதில் கதாநாயகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் சச்சு.
ஏனெனில் அந்த காலகட்டங்களில் 14 ,15 வயதிலேயே கதாநாயகியாக நடிக்க துவங்கி விடுவார்கள். உதாரணமாக வெண்ணிற ஆடை திரைப்படத்தில் கவர்ச்சி நடனத்திற்கு ஆடி ஜெயலலிதா நடித்த பொழுது அவருக்கு வயது 15. எனவே சச்சு கதாநாயகியாக ஆசைப்பட்டார்.
ஆனால் அவர் பார்ப்பதற்கு குழந்தை போலவே இருப்பதால் இன்னும் ஒரு நான்கு வருடங்கள் போகட்டும் என்று எம்.ஜி.ஆர் கூறினார் .ஆனால் எம்ஜிஆர் பேச்சை கேட்காத சச்சு சிவாஜியிடம் சென்று வாய்ப்பை பெற்று காமெடி கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.
அதன் பிறகு வெகுநாட்கள் கழித்து சச்சுவை பார்த்த எம்.ஜி.ஆர் கூறும் பொழுது நீ மட்டும் காத்திருந்து கதாநாயகியாக வந்திருந்தால் பெரும் இடத்தை பிடித்திருக்கலாம். இப்பொழுது காமெடி கதாநாயகியாக மட்டும் நின்று விட்டாய், இருந்தாலும் பரவாயில்லை அதில் உனக்கு தனிப்பட்ட ஒரு நடிப்பு முறையை வைத்திருக்கிறாய் என்று கூறிவிட்டு சென்றுள்ளார் ஒருவேளை சற்று எம்.ஜிஆ.ர் பேச்சை கேட்டிருந்தால் சச்சுவும் பெரிய நடிகையாக வந்திருக்கும் வாய்ப்புண்டு.
