Sivaji and MGR : என்ன மாதிரியான படம் நடிக்கலாம் என்பதில் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே பெரும் போட்டிகள் இருந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கதை படமாக்கப்பட இருக்கிறது என்றால் அதை எப்படியாவது தன் வசப்படுத்துவதற்கு எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் முயற்சி செய்வார்கள்.
முக்கியமாக மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெறக்கூடிய குடும்ப திரைப்படங்களுக்கு அப்போது அதிக மதிப்பு இருந்தது. தங்கைக்காக வாழும் அண்ணன் தாய்க்காக போராடும் மகன். இப்படியான கதைகளே பெரும் வெற்றியை கொடுத்தன.
எனவே இருவருமே மாறி மாறி அந்த மாதிரியான கதைகளத்தையே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் சிவாஜி கணேசனுக்கு ஒரு கதை சொல்லப்பட்டது. அது சிவாஜி கணேசனுக்கும் மிகவும் பிடித்திருந்தது அதில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் இதை எப்படியோ அறிந்த எம்.ஜி.ஆர் அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி அந்த படத்தில் அவர் நடிப்பதாக கூறியுள்ளார் தயாரிப்பு நிறுவனமும் சிவாஜியை விட எம்.ஜி.ஆர் நடித்த அந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என்று எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பை கொடுத்து விட்டனர்.
அதுதான் பெற்றால்தான் பிள்ளையா என்கிற திரைப்படம் இந்த திரைப்படத்தில் காமெடி நடிகருக்கு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்பது இயக்குனரின் ஆசையாக இருந்தது. எனவே நடிகர் தங்கவேலை வைத்து ஒரு பாடலை இயக்கினார் இயக்குனர்.
அந்த பாடலுக்கு வாலிதான் பாடல் வரிகளை எழுதினார். இந்த நிலையில் இந்த விஷயம் மிகவும் தாமதமாகத் தான் எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தது. உடனே வாலியை அழைத்த எம்.ஜி.ஆர் அந்த இயக்குனர்தான் புதிதாக சினிமாவிற்கு வந்தவர் அவருக்கு என்னை பற்றி தெரியாது நீங்கள் என்னுடனே தானே பயணிக்கிறீர்கள் நீங்களும் எப்படி இந்த பாடலை எடுக்க அனுமதித்தீர்கள் எனக் கூறிய எம்.ஜி.ஆர் பிறகு அவரை வைத்து பாடலை இயக்கிய அந்த படத்தில் வைக்க சொன்னார்.

அப்படியாக தான் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்கிற பாடல் உருவானது ஏனெனில் எம்.ஜிஆ.ரை பொறுத்தவரை அவர் படங்களில் வரும் பாடல்களில் அவர்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார் என கூறப்படுகிறது இதனால் தான் அவர் வாலியை கடிந்து கொண்டார்.






