Cinema History
என்ன கேட்காம அந்த முடிவை எப்படி எடுத்தீங்க!.. சின்னப்பதேவர் எம்.ஜி.ஆர் நட்பு இப்படிதான் முடிவுக்கு வந்தது!..
கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கே பெரும்பாலும் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அப்படியாகதான் நடிகர் எம்ஜிஆரும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.
நாடகங்களில் இருந்த காலகட்டம் முதலே சின்னப்ப தேவர் என்கிற நபருக்கும் எம்ஜிஆருக்கு நல்ல பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் சின்னப்ப தேவர் தமிழ் சினிமாவில் எம்ஜிஆரின் உதவியுடன் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் சின்னப்பர் தேவர் 2 திரைப்படங்களை தயாரித்தார். அந்த இரண்டு திரைப்படங்களும் அவர் எதிர்பார்க்க வெற்றியை கொடுக்காமல் பெரும் தோல்வியை கண்டது.

படம் தயாரிப்பதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது ஊரை விட்டு கிளம்பலாம் என்று முடிவு எடுத்திருந்தார் சின்னப்ப தேவர். இந்த நிலையில்தான் அவரிடம் பேசிய எம்.ஜி.ஆர் இத்தனை பேரை வைத்து படம் எடுத்தீர்களே.
உங்களுடைய நண்பன் என்னிடம் நீங்கள் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என்று கூறி இருக்கிறார். அதனை அடுத்து எம்.ஜி.ஆரை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் சின்னப்ப தேவர். அதனை தொடர்ந்துதான் அவர் தேவர் பிலிம் செல்கிற நிறுவனத்தையும் தொடங்கினார்.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு நாகி ரெட்டியார் ஆர்வமாக இருக்கவே அவருக்கு தெலுங்கு படத்தின் உரிமத்தை கொடுத்தார் சின்னப்பு தேவர். தெலுங்கில் டப்பிங் செய்த நாகி ரெட்டியார் அங்கு வெளியிட்டு அதன் மூலம் அதிலும் நல்ல லாபத்தை பெற்றார்.
இந்த நிலையில் இதனால் கோபம் அடைந்த எம்ஜிஆர் சின்னப்ப தேவரிடம் வந்து எனது குரலுக்கு எப்படி வேற ஒரு நபரை நீங்கள் டப்பிங் செய்ய வைக்கலாம் என்று சண்டையிட்டு சென்று இருக்கிறார் அதற்கு பிறகு சின்னப்ப தேவருக்கும் எம்ஜிஆருக்கும் முன் இருந்த அளவிற்கான நட்பு உண்டாகவே இல்லை என்று கூறப்படுகிறது.
