Cinema History
எல்லாமே ப்ளாப் திரைப்படமா இருக்கு.. அதுனால எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மாட்டேன்!.. தட்டி கழித்த ஹிந்தி நடிகர்!..
MGR : திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றை ரீமேக் செய்து வெளியிடுவது என்பது இப்போது வேண்டுமானால் எளிதான விஷயமாக இருக்கலாம். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அது கொஞ்சம் கடினமான விஷயமாக இருந்தது.
எம்ஜிஆர் நடித்த தமிழில் பெரும் வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களை அப்போது இருந்த தயாரிப்பாளர்கள் ஹிந்தியில் அதை திரைப்படமாக்க நினைத்தனர். ஏனெனில் தமிழ் மார்க்கெட்டை விடவும் ஹிந்தி மார்க்கெட் கொஞ்சம் பெரியது.
அதனால் அங்கு அந்த படம் வெளியாகும் போது அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்த நிலையில் எம்ஜிஆர் நடித்து தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த ரிக்ஷாக்காரன் திரைப்படத்தை ஹிந்தியில் எடுக்கலாம் என்று முடிவெடுத்தனர்.
இதற்காக அப்பொழுது ஹிந்தியில் பிரபலமாக இருந்த கதாநாயகன் தர்மேந்திராவிடம் சென்றனர். ஆனால் தர்மேந்திரா மிகவும் பிசியாக இருந்த காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனை தொடர்ந்து அந்த கதை நடிகர் ராஜேஷ் கண்ணாவிடம் சென்றது.
ராஜேஷ் கண்ணா அப்பொழுது தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து இருந்தார். எனவே ரிக்ஷாக்காரன் திரைப்படம் அவருக்கு தோல்வியடையும் என்று தோன்றியது எனவே அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அவரும் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில்தான் இந்த திரைப்படம் ரந்தீர் கபூர் இடம் சென்றது. ரந்தீர் கபூர் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அதன் பிறகு உருவான ரிக்ஷாவாலா என்கிற அந்த திரைப்படம் தமிழை விடவும் பாலிவுட்டில் பெரும் ஹிட் கொடுத்தது. நல்ல திரைப்படம் ஒன்றை தவறவிட்டதற்காக பிறகு நடிகர் ராஜேஷ் கண்ணா மிகவும் வருத்தப்பட்டார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்