News
”கடவுளா மாற வேணாம் மாஸ்டர்..!” – ஆக்ஷன் தெறிக்கும் ”மைக்கேல்” டீசர்!
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள மைக்கேல் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழில் புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் ‘மைக்கேல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் திவ்யன்ஷா கவுசிக் நாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அய்யப்ப சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான ஆக்ஷன் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன. இது ஒரு ரிவெஞ்ச் ஸ்டோரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசரில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
