டிக்கியில் கடித்த ஓநாய்.. ஓநாய் மனிதனான ஹீரோ! – “பெடியா” காமெடி ட்ரெய்லர்!

இந்தியில் வருண் தவான் நடித்துள்ள ஓநாய் மனிதன் கதையான பெடியா ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஓநாயாக மாறும் ஓநாய் மனிதன் (Werewolf) கதைகள் ரொம்பவே பிரபலம். ஹாலிவுட்டில் இதை வைத்து காலம் காலமாக பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த கான்செப்ட்டை கொண்டு இந்தியில் காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது “பெடியா”

இந்தியில் திகில் படமான “ஸ்ட்ரீ”, “பாலா” படங்களை இயக்கிய அமர் கௌசிக் இந்த படத்தை இயக்கியுள்ளார். வருண் தவான் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். க்ரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். உடன் தீபக் டொப்ரியால், அபிஷேக் பானர்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காட்டிற்குள் செல்லும் ஹீரோவை டிக்கியில் ஓநாய் கடித்து விடுவதால் இரவானால் ஓநாய் மனிதனாகும் சக்தியை பெறுகிறார் ஹீரோ. இதை வைத்து காமெடியான ஒரு ஜங்கிள் அட்வெஞ்சர் கதையை உருவாக்கியுள்ளார்கள். படம் முழுவதும் காட்டிலேயே நடப்பதுபோல அமைத்துள்ளனர். இதன் ட்ரெய்லர் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

Refresh