Connect with us

என்னது பொங்கலுக்கு வடக்கறியா? ராம் மிர்ச்சி சிவா கூட்டணியில் அடுத்த படம்!..

ram mirchi siva

News

என்னது பொங்கலுக்கு வடக்கறியா? ராம் மிர்ச்சி சிவா கூட்டணியில் அடுத்த படம்!..

Social Media Bar

Director Ram and Mirchi siva: தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம். அவர் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் போகப்போக அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக அது இருந்தது.

அதற்கு பிறகு அவர் இயக்கிய தங்க மீன்கள் பேரன்பு போன்ற ஒவ்வொரு திரைப்படமும் மற்ற திரைப்படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருந்தன. மேலும் அவர் படத்தில் பேசிய விஷயங்களும் மாறுபட்ட விஷயங்களாக இருந்தன.

இந்த நிலையில் தற்சமயம் ஏழு கடல் ஏழுமலை என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராம். இந்த திரைப்படத்தில் நிவின் பாலியும் சூரியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்காக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இயக்குனர் ராமின் அடுத்தப்படம்:

ஏனெனில் தற்சமயம் நடிகர் சூரியின் படங்களுக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு அடுத்து நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் ராம். மிர்ச்சி சிவா பொதுவாக காமெடி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர்.

அவரை வைத்து ராம் இப்படியான திரைப்படத்தை இயக்குவாரா என்பதே ஒரு கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய மிர்ச்சி சிவா கூறும்போது ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்தபோது ராம் இயங்கும் திரைப்படங்கள் நமக்கு செட்டாகாது என்று நினைத்து அவருக்கு கை கொடுத்துவிட்டு கிளம்ப நினைத்தேன்.

ஆனால் என்னிடம் பேசிய ராம் கூறும் பொழுது நீங்கள் சென்னை 28 திரைப்படம் நடிக்கும் பொழுதே உங்களை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எனக்கு ஆசையாக இருந்தது. உங்களுக்கு தகுந்தார் போல ஒரு கதை என்னிடம் இருக்கிறது என்று என்னிடம் கதையை கூறினார்.

எனக்கும் அதில் நடிக்கலாம் என்று தோன்றியது. அதனை தொடர்ந்து ஒரே மாதிரி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் சிறிது மாறுபட்டு நடிப்போம் என்று யோசித்தேன். எனவே ராமின் அந்த திரைப்படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். அந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கும் அதற்கு பெயரும் வைத்துவிட்டோம். ஆனால் இப்பொழுது கூற முடியாது என்று கூறியிருக்கிறார் மிர்ச்சி சிவா!..

To Top