News
லாரன்ஸ் படத்தில் களம் இறங்கும் மிர்னாள் தாகூர்!.. ஒரு வழி ஆன மாதிரிதான்!..
பாலிவுட் சினிமாவின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிருனாள் தாக்கூர். மிர்னாள் தாக்கூருக்கு ரொம்ப காலங்களாகவே ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் இருந்து வந்தது.
ஆனால் அதற்குப் பிறகுதான் இந்தியை விட தெலுங்கில் அவருக்கு பிடித்தமான திரைப்படங்கள் வருவதை அறிந்த மிர்னாள் தாக்கூர் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு வந்தார்.

தெலுங்கில் அவர் நடித்த முதல் திரைப்படமான சீதாராமம் திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் திரையுலகிலும் பெரும் வெற்றியைக் கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு இரண்டிலும் பிரபலமான நடிகையாக மாறினார் மிர்னாள் தாகூர்.
தமிழில் வாய்ப்பு:
இந்த நிலையில் அவரை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல இயக்குனர்கள் வரிசையாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தெலுங்கில் பிஸியாக இருப்பதால் அவர் இன்னும் தமிழில் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து இயக்க இருக்கும் முனி திரைப்படத்தின் ஐந்தாவது பாகத்தில் நடிகை மிர்னாள் தாக்கூரை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கு மிர்னாள் தாக்கூரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாகவே லாரன்ஸ் திரைப்படத்தில் நடிக்க வரும்பொழுது அவர்கள் அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில் இந்த படத்திலும் கவர்ச்சியாக இவர் நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
