Connect with us

நன்றி உணர்வு இருந்தா இப்படி நக்கல் பண்ணுவீங்களா!.. பா.ரஞ்சித் ரஜினி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மோகன் ஜி!.

pa ranjith mohan g

News

நன்றி உணர்வு இருந்தா இப்படி நக்கல் பண்ணுவீங்களா!.. பா.ரஞ்சித் ரஜினி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மோகன் ஜி!.

Social Media Bar

பா.ரஞ்சித் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் அவர் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவையாக இருந்து வந்துள்ளன. அட்டக்கத்தி திரைப்படத்தில் அறிமுகமான பா.ரஞ்சித்திற்கு மெட்ராஸ் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

மெட்ராஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்போது தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் பா.ரஞ்சித்திற்கு வாய்ப்பு கொடுத்தார். பா.ரஞ்சித்தும் அவரை வைத்து கபாலி எனும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் பிகே ரோஸி திரைப்பட விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

அதில் பா.ரஞ்சித்திடம் கேள்வி கேட்ட நபர், நீங்கள் படங்களில் பேசும் அரசியல் அதில் நடிக்கும் ரஜினிகாந்திற்கே தெரியாது போல என கேட்டிருந்தனர். அதற்கு சிரித்திருந்தார் பா.ரஞ்சித். இந்த நிலையில் இந்த வீடியோ வெகுவாக ட்ரெண்ட் ஆனது.

Pa-Ranjith-
Pa-Ranjith-

பலரும் இதற்காக பா.ரஞ்சித்தை விமர்சித்து வந்தனர். வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்தையே இப்படி நக்கல் செய்யலாமா, நன்றி மறந்த பா.ரஞ்சித் என்றெல்லாம் பேசியிருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு பதிலளித்த இயக்குனர் மோகன் ஜி கூறும்போது ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்து உங்களை பெரிய இடத்தில் கொண்டு போய் வைத்துள்ளார்.

அவரை போய் நக்கல் செய்யலாமா? சிந்தாந்த ரீதியாக எங்களை எதிர்ப்பது கூட பரவாயில்லை. ஆனால் ரஜினியிடம் நன்றியுணர்வு இருக்க வேண்டாமா என கூறியுள்ளார் மோகன் ஜி.

To Top