என்னை என்ன காசுக்காக பேசுறவன்னு நினைச்சாரா!.. காமராஜர் செயலால் கடுப்பான எம்.ஆர் ராதா!..

MR Radha and Kamarajar : தமிழில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர் ராதா. மற்ற நடிகர்களை போல அல்லாமல் தனக்கென ஒரு தனி நடிப்பு ஸ்டைலை கொண்டிருந்தார் எம்.ஆர் ராதா. அதனாலேயே அவரது நடிப்பிற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

அப்போது பெரியாரின் கருத்துக்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஆர் ராதாவிற்கு காமராஜரும் பிடித்த தலைவராக இருந்து வந்தார். ஆனால் காமராஜர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அப்போது அவருக்கும் முத்துராமலிங்கத்திற்கும் இடையே போட்டி இருந்தது.

இந்த நிலையில் எம்.ஆர் ராதாவின் உதவி காமராஜருக்கு தேவைப்பட்டது. எனவே அவர் எம்.ஆர் ராதாவை தொடர்பு கொண்டார். இதனையடுத்து இவர்கள் இருவரும் நேரில் ஒருநாள் சந்தித்தனர். அப்போது காமராஜர் பேசும்போது என்னை தோற்கடிக்க வேண்டும் என முத்துராமலிங்கம் நிறைய விஷயங்களை செய்கிறார்.

mr-radha
mr-radha
Social Media Bar

நீங்கள் எனக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியுமா என கேட்டுள்ளார் காமராஜர். எம்.ஆர் ராதா மறு பேச்சு எதுவும் பேசவில்லை. உங்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறேன் என கூறி அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் எம்.ஆர் ராதாவின் வீட்டிற்கு வந்த காமராஜரின் ஓட்டுநர் 10,000 ரூபாய்க்கான காசோலையை நீட்டி இதை தேர்தல் மற்றும் பயண செலவுக்காக ஐயா கொடுத்தார் என கூறியுள்ளார். அதை கேட்டு கடுப்பான எம்.ஆர் ராதா காசுக்காக சப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக பேசிவிடுவேன்.

கொள்கை ரீதியாக எனக்கு காமராஜரை பிடிக்கும். ஏழைகளுக்கு பள்ளிகளின் வாசலை திறந்துவிட்டவர் அவர். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய எனக்கு எதுவும் காசு வேண்டாம் என திருப்பி அனுப்பியுள்ளார் எம்.ஆர் ராதா.