Cinema History
சாகும் தருவாயிலும் எம்.ஜி.ஆர் செய்த உதவி!.. மனம் திருந்திய வில்லன் நடிகர்! நல்ல உருட்டு!..
Actor MGR: எப்போதும் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்கள் அல்லது தலைவர்கள் குறித்து நிறைய புரளிகள் இருக்கும். தேசத்தலைவர்கள் குறித்து கூட இப்படியான புரளிகள் உண்டு. உதாரணத்திற்கு அப்துல் கலாம் விவேகானந்தர் போன்றவர்கள் கூறிய பொன்மொழிகளாக வலம் வரும் பொன்மொழிகளில் பாதிக்கு மேல் போலியாக உருவாக்கப்பட்டதாகதான் இருக்கும்.
அதேபோல எம்.ஜி.ஆர் விஷயத்திலும் நிறைய புரளிகள் உண்டு. எம்ஜிஆர் குறித்து அவர் நன்மைகள் செய்ததாகவும் தீமைகள் செய்ததாகவும் சொல்லப்படும் விஷயங்களில் சில புரளியாக இருப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
அப்படியான ஒரு விஷயம்தான் சமூக வலைதளத்தில் கேளிக்கு உள்ளாகி வருகிறது. அதாவது எம்.ஜி.ஆர் மீது பகை கொண்டு அவரை துப்பாக்கியால் சுட்டது எம் ஆர் ராதா என்பது பலருக்கும் தெரியும். அப்பொழுது எம்.ஆர். ராதாவும் தன்னை சுட்டுக் கொண்டார். அதன் பிறகு இந்த பிரச்சனைக்காக அவரை சிறையில் அடைத்தனர்.
அப்பொழுது சிறையில் அவரை சந்தித்த ஒரு கைதி அவரிடம் என்ன குற்றத்திற்காக உள்ளே வந்தீர்கள் எனக் கேட்ட பொழுது எம்.ஜி.ஆரை சுட்டு விட்டு உள்ளே வந்தேன். ஆனால் நான் செய்தது மிகப்பெரிய தவறு என்று வருந்தினார் எம் ஆர் ராதா.
அது தவறு என்று தெரிந்த பொழுது எதற்கு அதை செய்தீர்கள் என்று அந்த நபர் கேட்ட பொழுது நான் சுட்டப்பிறகுதான் எனக்கு அது தவறு என்று தெரிந்தது. ஏனெனில் எம்.ஜி.ஆர் கழுத்தில் சுடப்பட்டு ரத்தத்துடன் இருந்தபோது அதை பார்த்துவிட்டு நான் என்னை சுட்டுக் கொண்டேன் அப்பொழுது வந்த நபர்களிடம் முதலில் அண்ணனை காப்பாற்றுங்கள் என்று கூறினார் எம்.ஜி.ஆர்.
அதைக் கேட்டதும் என் மனது உடைந்து விட்டது என்று கூறி இருக்கிறார் எம்.ஆர் ராதா என்று எம்.ஜி.ஆர் கூறியதாக ஒரு விஷயம் எம்.ஜி.ஆர் குறித்து பேசப்படுகிறது. ஆனால் கழுத்தில் சுடு வாங்கிய எம் ஜி ஆர் அப்பொழுது முதலில் எப்படி பேசியிருக்க முடியும் என்று லாஜிக்கான கேள்வியை கேட்டு அது புரளி என்பதை உறுதி செய்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்