Tamil Cinema News
சக்திமானா நடிச்சி 6 மாதம் கஷ்டப்பட்டேன்… தமிழ் மக்களின் அன்பு.. மனம் திறந்த நடிகர் முகேஷ் கண்ணா.!
ஒரு காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிக பிரபலமாக இருந்த டிவி தொடராக சக்திமான் இருந்தது. உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோ கதையை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களும், டிவி சீரியல்களும் வந்த வண்ணம் இருந்தப்போது இந்தியாவில் மட்டும் அப்படி ஒன்று வராமலே இருந்தது.
அதனை பூர்த்தி செய்யும் வகையில் முகேஷ் கண்ணா உருவாக்கிய தொடர்தான் சக்திமான். அவரே அதில் கதாநாயகனாகவும் நடித்தார். சக்தி மான் தொடர் அப்போது எக்கச்சக்க வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இப்போது வரை எந்த ஒரு டிவி தொடருக்கும் இந்திய அளவில் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது கிடையாது.
ஆனால் பாதியிலேயே சக்திமான் தொடர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இதுக்குறித்து பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது சக்திமானில் முதல் எபிசோடை முடிப்பதற்கே 27 நாட்கள் எங்களுக்கு தேவைப்பட்டது.
சக்திமான் தொடர் இந்திய அளவில் பிரபலமடைந்த பிறகு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க சென்னை வந்திருந்தேன். அப்போது என்னை பார்க்க மிகப்பெரிய கூட்டம் ஒன்று வந்தது. ஆனால் ஒரு சிறுவன் சக்திமான் காப்பாற்ற வருவார் என மாடியில் இருந்து குதித்தது அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதுவரை தூர்தர்ஷன் சேனலில்தான் சக்திமான் ஓடி வந்தது. ஆனால் அந்த நிகழ்வுக்கு பிறகு தூர்தர்ஷன் சக்திமான் தொடரை நீக்கியது. ஆறு மாதம் எனக்கு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது என மனம் நொந்து போய் கூறுகிறார் முகேஷ் கண்ணா.
