News
ஆரம்பத்துல புரியல… இதுனால தான் சினிமாவ விட்டேன்… நடிகை மும்தாஜ் open up!
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான மும்தாஜ், தான் சினிமாவை விட்டு விலக காரணம் இதுதான் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இயக்குனர் டி. ராஜேந்திரனின் படங்களில் அதிகமாக நடித்து பலரையும் கவர்ந்தவர்தான் மும்தாஜ். இவருடைய அறிமுக படமான மோனிஷா என் மோனலிசா திரைப்படம் மூலம் ரசிகர்கள் கவனத்தில் ஈர்க்கப்பட்டார். அதுபோல குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து கட்டிபுடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு போட்ட ஆட்டம் ரசிகர்களால் மறக்க முடியாது. அதுபோல “மல.. மல..மல.. மருதமலை” பாடல் இப்போதும் ஹாஸ்டல் பெண்களின் ஹாப்பி மூட் பாடலாக இருக்கிறது.
இந்தப் பாடலுக்கு பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் சேர்ந்து கையில் டவலோடு ஆட்டம் போட, புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி இருந்தார் மும்தாஜ்.
கவர்ச்சி நடிகையாக சினிமாவில் கலக்கிவந்த மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் தனது இமேஜை மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன், எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். அல்லாஹ் எனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் அதில் சொல்லப்பட்ட விஷயத்தின் அர்த்தம் தெரியாமலே இருந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் ஒரு மாற்றம் தொடங்கியது. அதன் காரணமாகவே தான் நான் சினிமாவில் இனி இருக்க மாட்டேன் என்று முடிவு எடுத்ததாகவும் பேசியுள்ளார்.
