Cinema History
அந்த படத்துல நடிச்ச மாதிரி நடிக்க எனக்கு பிடிக்கல!.. தொடர்ந்து வரும் வாய்ப்புகளை நிராகரிக்கும் முனிஸ்காந்த்!.
Muniskanth: தமிழில் ஒரே படத்தில் திறமையை காட்டி பிரபலமான நடிகர்களில் நடிகர் முனிஸ்காந்தும் ஒருவர். முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமான முனிஸ்காந்த் அந்த ஒரு படத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார்.
அதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காமெடி நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அதிலும் அவர் நடித்த ஹாஸ்டல் திரைப்படம் முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்கு இணையான நகைச்சுவை காட்சிகளை கொண்டிருந்தது.
இதற்கிடையே ஒரு முறை ராட்சசன் திரைப்படத்திலும் முனிஸ்காந்த் நடித்தார். முனிஸ்காந்த் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி அவரால் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை அந்த படம் நிரூபித்தது.

ஆனால் இதுக்குறித்து முனிஸ்காந்த் கூறும்போது நான் ராட்சசன் படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து எனக்கு சீரியஸ் கதாபாத்திரங்களாக வந்தது. ஆனால் எனக்கு அந்த மாதிரியான பாத்திரங்களில் நடிப்பதில் விருப்பமில்லை.
ஏனெனில் தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களுக்கு ஏற்கனவே ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அதை நிரப்ப இன்னும் அதிகமான காமெடி நடிகர்கள் தேவையாக இருப்பதால் சீரியஸாக நடிப்பதற்கு வரும் வாய்ப்புகளை நிராகரித்து வருகிறேன் என கூறியுள்ளார் முனிஸ்காந்த்!.
