Connect with us

ரஜினிக்கு மட்டும்தான் அந்த பெரிய மனசு உண்டு.. அஜித்,விஜய்க்கு கூட கிடையாது!.. ஓப்பனாக கூறிய தேவா!..

deva rajinikanth

Cinema History

ரஜினிக்கு மட்டும்தான் அந்த பெரிய மனசு உண்டு.. அஜித்,விஜய்க்கு கூட கிடையாது!.. ஓப்பனாக கூறிய தேவா!..

Social Media Bar

Tamil Musician Deva: கானா பாடலை திரைத்துறைக்கு கொண்டு வந்து அதில் வெற்றி கொடி நாட்டியவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கானா பாடல்களை பொறுத்தவரை கிராமிய பாடல்கள் மட்டுமே கானா பாடல்கள் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருந்தது.

அதை சினிமாவிலும் கொண்டு வந்து அதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தார் இசையமைப்பாளர் தேவா. கானா பாடல்கள் மட்டுமின்றி மெலோடி பாடல்களிலும் பல வித்தைகளை காண்பித்தவர் தேவா. எனவே தமிழில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார் தேவா.

தமிழில் பிரபலமாக உள்ள பல நடிகர்களுடன் இசையமைத்துள்ளார். இது பற்றி அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது அஜித் விஜய் மாதிரியான பெரும் நடிகர்களுக்கு இசையமைத்த அனுபவம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நீங்கள் இசையமைத்த பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்று அஜித் விஜய் போன்ற நடிகர்கள் உங்களிடம் கூறியிருக்கிறார்களா? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த தேவா இல்லை விஜயோ அல்லது அஜித்தோ ஒருமுறை கூட படத்தில் நான் இசையமைத்த பாடல்கள் நன்றாக உள்ளது என்று கூறியது கிடையாது என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் அஜித் விஜய் இருவருக்குமே பல ஹிட் பாடல்களை தேவா கொடுத்துள்ளார். வாலி, ஆசை, முகவரி போன்ற பல படங்களில் அஜித்துக்கும், குஷி, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்களில் விஜய்க்கும் தேவா இசை அமைத்திருக்கிறார்.

இது குறித்து தேவா மேலும் கூறும்பொழுது தமிழ் நடிகர்களிலேயே ரஜினி மட்டும்தான் நான் இசையமைத்த பாடல் நன்றாக இருக்கிறது என்று போன் செய்து எனக்கு வாழ்த்து கூறுவார். வேறு எந்த நடிகருக்கும் அப்படி வரும் மனசு கிடையாது என்று வெளிப்படையாக கூறியுள்ளார் தேவா.

To Top